ஆண்டவர் உன் சத்துரு அல்ல!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன் சத்துரு அல்ல!

ஹிரோ ஒனோடா ஒரு ஜப்பானிய உளவுத்துறை அதிகாரி ஆவார், அவர் டிசம்பர் 1944ல் காலாட்படையின் 61வது வகயாமா படைப்பிரிவில் சேர்ந்தார். ஜப்பான் ஆக்கிரமித்துள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கப் பகுதிகள்தான்… அவரது எல்லையாக இருந்தது. 1945ல், அமெரிக்கப் படைகள் இந்தத் தீவைத் தன் வசப்படுத்திக்கொண்டன. இருப்பினும், ஒனோடா தொடர்ந்து போர் செய்தார். எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்தை அவர் நிராகரித்தார். 1959ல், அவர் ஜப்பானில் சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒனோடா தனது ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுமாறு தனது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு பெறாததால், சண்டை முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை ஏற்க பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்பதை ஒரு ஜப்பானிய மாணவன் அறிந்துகொண்டான். 1974ம் ஆண்டில், ஜப்பானின் தோல்வியைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கவும், ஆயுதங்களைக் கீழேபோடுமாறு கட்டளையிடவும் ஒனோடாவின் முன்னால் தளபதியான லுபாங் என்பவர் அந்தக் குறிப்பிட்ட தீவுக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போர் முடிந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகுதான், இடைநிலை அதிகாரியான ஒனோடா காட்டை விட்டு வெளியேறினார்.

சில சமயங்களில் நாம் ஆண்டவரிடமிருந்து விலகிச்சென்று ஒளிந்துகொள்கிறோம், அவருக்குப் பயப்படுகிறோம். நாம் கர்த்தரை இரட்சிப்பு பற்றிய விஷயங்களில் உண்மையாக விசுவாசித்தாலும், அவ்வப்போது நாம் செய்யும் பாவங்கள் நம்மை ஆண்டவருக்குச் சத்துருவாக்குகிறது என்று நம்புகிறோம். ஒனோடாவைப் போலவே, போர் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்டவருக்கும் நமக்கும் இடையேயான இந்தப் போர் முடிந்துவிட்டது. நாம் இரட்சிக்கப்பட்டு, ஒப்புரவாக்கப்பட்டு, ஆண்டவரோடு நண்பர்களாக இருக்கிறோம். ரோமர் 5:10ல், “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” என்று வேதாகமம் சொல்கிறது.

“ஒப்புரவாகுதல்” என்ற வார்த்தை “கட்டால்லாஸோ” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது; அதாவது “ஆண்டவர் வசம் திரும்புதல்” என்பதே இதன் பொருளாகும். என் நண்பனே/தோழியே, இதை நீ நம்பு. நீ இனி ஆண்டவருக்கு சத்துரு அல்ல, ஒரு நண்பனாக/தோழியாக இருக்கிறாய். தமது குமாரனின் மரணத்தின் மூலம் ஆண்டவர் உன்னைத் தம்முடன் ஒப்புரவாக்கிக்கொண்டார். இயேசு உன்னில் ஜீவிக்கிறார்! அவருடைய தயவு உனக்கு உண்டு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!