ஆண்டவர் உன்மீது அக்கறைக் கொண்டவர்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்மீது அக்கறைக் கொண்டவர்

“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:6-7)

நாம் ஆண்டவருடன் நடக்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கண்ணீரின் பங்கும் உண்டு… மகிழ்ச்சி, துக்கம் அல்லது போராட்டத்தின் தருணங்களில் கண்ணீர் சிந்துகிறோம். ஒவ்வொரு நாளும் தனித்துவமானது, புதிய சூழ்நிலைகள், உணர்ச்சிகள் மற்றும் சவால்களைக் கொண்டுவருகிறது.

ஆனால் இன்று உனக்கு என்ன காத்திருந்தாலும், ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்! மேலும், அவர் உனக்காக போராடுகிறார். நீ தற்போது உன் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருந்தாலும், அவர் உன்னுடன் இருக்கிறார், இங்கே உன் அருகில் இருக்கிறார் என்பதை உனக்கு உறுதியாக சொல்கிறேன். அவர் உன்னிடம் பேசுவார், வழி காட்டுவார், உன்னுடன் பயணிப்பார். நீ விழ மாட்டாய். நீ சோர்ந்துபோகமாட்டாய்!

மனச்சோர்வு உன் எண்ணங்கள் மற்றும் ஆன்மாவின் கதவைத் தட்டும்போது, ​​நீ அந்தக் கதவைத் திறக்க மாட்டாய், ஏனென்றால் உன் விசுவாசம் ஆண்டவரின் மீது உள்ளது… நீ எப்போதும் விசுவாசிக்கக்கூடிய ஒரு உண்மையுள்ள தேவன்! அவர் உன்னை விசாரிக்காத, கவனிக்காத ஒரு கனமும் உன் வாழ்வில் இருக்காது. ஆண்டவர் தாமே உன்னுடைய தந்தையும், உன் முழுநேர பாதுகாவலரும் ஆவார். அவர் ஓய்வு எடுப்பதில்லை. நீ அவரை அழைக்கும்போது ஒருபோதும் பிஸியாகவோ (busy) அல்லது ஹோல்டிலோ (hold) செல்லாது என்பதில் உறுதியாக இரு.

உன் பரலோகத் தகப்பன் முடிவில்லாத அன்புடன் உன்னை நேசிக்கிறார்! அவர் ஒவ்வொரு கனமும் உன் மீது அக்கறை கொண்டுள்ளார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!