ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (வேதாகமத்தில், யோவான் 3:16ஐப் பார்க்கவும்)

வேதாகமத்தின் மைய வசனங்களில் ஒன்றான யோவான் 3:16 எனக்கு மிகவும் பிடித்த வசனமாகும், ஏனெனில் இது தெய்வீக அன்பின் இரட்டை அணுகுமுறையை விளக்குகிறது: ஒன்று உலகளாவிய அன்பு மற்றொன்று தனிப்பட்ட விதத்தில் அன்புகூருதல்.

தெய்வீக அன்பின் உலகளாவிய அணுகுமுறை: ஆண்டவர் இந்த உலகத்தை நேசிக்கிறார். இன்றைய காலகட்டத்தில், உலகத்தின் பெரும்பாலான பகுதியை சந்திப்பதற்கு இணையதளம் நமக்கு உதவுகிறது.

உண்மையிலேயே, முன்நூறு கோடிக்கும் அதிகமானோர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர், அனுதினமும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர், மேலும் 2 கோடிக்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள்! சில மிஷனரிகள் தங்களுடைய டென்னிஸ் காலணிகளையும், மற்றும் சிலர் தங்கள் கணினிகளையும் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுகிறது! ஆம், நம் உலகம் மாறிவிட்டது, ஆனால் அதன் தேவை அப்படியே உள்ளது: ஆண்டவருடைய அன்பை அறியவேண்டிய அதன் தேவை அப்படியேதான் இருக்கிறது.

தெய்வீக அன்பின் தனிப்பட்ட அணுகுமுறை: மேற்கண்ட வசனத்தில் “எவனோ” என்ற வார்த்தை ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் குறிக்கிறது. எண்களைக்கொண்டு கணக்கிடுவதற்கும் அப்பால், இந்த வார்த்தையானது ஒவ்வொரு நபரையும் கணக்கில் வைக்கிறது. நீ விலையேறப்பெற்ற ஒரு நபராய் இருக்கிறாய்! ஆண்டவர் உன்னை மிகவும் நேசிக்கிறார். நீ அவருடைய பார்வையில் மிகவும் கனம் பெற்றிருக்கிறாய், அவர் உனக்காக தம்முடைய சொந்த குமாரனையே கொடுத்திருக்கிறார். இயேசு உனக்காக மட்டுமே தம்முடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்றாலும் கூட, அவர் நிச்சயம் அதைக் கொடுத்திருப்பார்.

ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், நானும் உன்னை நேசிக்கிறேன், ஏனெனில் உன்னை நேசிக்கும்படியான அன்பை அவர் எனக்குள் வைத்திருக்கிறார். அவர் உன்னை அனுதினமும் ஆசீர்வதிக்கும்படி நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!