ஆண்டவர் உன்னை நீதிமானாக்குகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னை நீதிமானாக்குகிறார்!

“தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” (வேதாகமத்தில் ரோமர் 8:33ஐப் பார்க்கவும்)

சூரிய உதயத்தைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வானம் தனது இரவு நேர வஸ்திரத்தை விலக்கிவிட்டு, வெளிச்சத்தால் தன்னைத் தானே உடுத்திக் கொண்டது… இருள் வெளிச்சத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

அன்பரே, இன்று நீதியின் சூரியன் உன் வாழ்வில் உதிக்கின்றது. கிறிஸ்து உன்னை விடுவிக்கிறார்…

  • உன் கடந்த கால அவமானத்திலிருந்து உன்னை விடுவிக்கிறார்.
  • உன்னைக் குறித்துச் சொல்லப்பட்ட மரணத்திற்கேதுவான வார்த்தைகளிலிருந்து உன்னை விடுவிக்கிறார்.
  • உன் எண்ணங்களை அலைக்கழிக்கும் ஆக்கினைத்தீர்ப்பு வார்த்தைகளிலிருந்து உன்னை விடுவிக்கிறார்.

கிறிஸ்து உன்னை விடுவிக்கிறார், அவருடைய தொனியானது உன் ஆத்துமாவைக் குற்றம் சாட்டுபவர்களின் தொனியை விட வலிமையானது!

அதன் அர்த்தம் இதுதான்…

  • நிந்தை உனக்கு நேரிடாது.
  • உன் கடந்த கால நிகழ்வுகள் ஒருபோதும் உன் மீது அதிகாரம் செலுத்தாது.
  • நீ சுத்தமாகக் கழுவப்பட்டிருக்கிறாய், பனியைப்போல் வெண்மையாக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டிருக்கிறாய்.
  • தேவன் ஒருவரே நீதியை நிறைவேற்றுபவர்!

குற்றச்சாட்டுகள், வதந்திகள், பொய்கள் போன்றவற்றால் உன்னை நீ சோர்ந்துபோக அனுமதிக்காதே… இன்று காலை வேளையில், சகல சிருஷ்டிகளும் விழித்தெழும்போது, ​​நீதியின் சூரியன் உன் வாழ்க்கையில் உதயமாகிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!