ஆண்டவர் உன்னை உற்றுநோக்கி கவனிக்கிறார்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னை உற்றுநோக்கி கவனிக்கிறார்…

“என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை எனக்கு மறையாதேயும், நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்…”(வேதாகமம், சங்கீதம் 27:8-9)

உன் இருதயம் பேச ஏங்குகிறது. உன் உள்ளம் ஆண்டவரைச் சந்திப்பதற்காக தாகமாக உள்ளது.
வேதாகமம் சொல்கிறது, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. (மத்தேயு4:4). அவரது வாய் அவரது முகத்தின் ஒரு அங்கம் தானே?

  • அவருடைய முகம்தான் அவருடைய பிரசன்னம்.
  • அவரது முகம்தான் அவரது கனிவான மற்றும் மென்மையான குரல்.
  • அவருடைய முகம்தான் அவருடைய உற்றுநோக்கும் கண்.
  • அவரது முகம்தான் கவனமாய் உற்று கவனிக்கும் காது.

அன்பால் நிறைந்து தன் குழந்தையின் தொட்டிலைப் பார்க்கும் தாயைப் போல, ஆண்டவர் உன்னை மென்மையான ஒரு புன்னகையுடன் பார்க்கிறார்.

அவர் உன்னிடம் பேசுகிறார், உனக்குத் தேவையான சமயங்களில் உன்னை ஆறுதல்படுத்துகிறார், மேலும் இன்று நீ மீண்டும் ஜீவனால் நிரப்பப்படுவதற்காக அவருடைய ஜீவ சுவாசத்தை உன் மீது ஊதுகிறார் (ஆதியாகமம் 2:7 ஐப் பார்க்கவும்).

அவருடைய முகத்தைத் தேடு. அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவருடைய உயிரூட்டும் பிரசன்னம் உன்னை சூழ்ந்து மூடும்படிக்கும், அவர் உன்மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பை இன்று நீ உணரும்படிக்கும் நான் ஜெபிக்கிறேன்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!