ஆண்டவர் உன்னை இன்னும் மறக்கவில்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னை இன்னும் மறக்கவில்லை!

நான் வாசித்த ஒரு கடிதம் என் கவனத்தை ஈர்த்தது. அது போரூரில் வசித்துக்கொண்டிருக்கிற கிளாடியாவிடமிருந்து வந்தது.

அதில், “கர்த்தாவே, நான் அவ்வளவு தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று வியாதிப்பட்டிருந்திருக்க மாட்டேன். கர்த்தாவே, நான் உமக்குச் செவிகொடுத்திருந்தால், எனக்கு நேரிட்ட இந்தத் துன்பங்களையும் தோல்விகளையும் நான் அனுபவித்திருக்க மாட்டேன். நான் எப்படி இருந்திருக்க வேண்டுமோ, இப்போதே அப்படி மாற விரும்புகிறேன். கர்த்தாவே, என்னோடு கூட இருப்பீராக, நான் இன்று முதல் வேறுபட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என்று அவள் எழுதியிருந்தாள்.

சில நேரங்களில், நாம் அனுபவிக்கும் கடினமான சூழ்நிலைகள் நமது தவறான தீர்மானங்கள் மற்றும் தவறுகளின் விளைவால் ஏற்பட்டது என்பது உண்மைதான். சில சமயங்களில் ஆண்டவர் நம்மை எச்சரித்தார், நம்மிடம் பேசினார், ஆனால் நாம் அவருக்குச் செவிசாய்க்கவில்லை என்பது உண்மைதான். இவ்வாறு இறுதியில், நமக்கு நாமே வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டோம், அது நம்மைத் தோல்விக்கு நேராக இட்டுச்சென்றது.

இருப்பினும், தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்றும் அவருடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவை என்றும் வேதாகமம் கூறுகிறது. (புலம்பல் 3:22-23)

மனந்திரும்பி வந்த கெட்ட குமாரனைப்போல, கிளாடியா, தன் தவறுகளை ஒப்புக்கொண்டு தன் பிதாவிடம் திரும்பி வர வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்தாள். அந்தக் கதையில் தகப்பன் தன் மகனுக்காக வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தார். தூரத்தில் தன் மகன் வருவதைக் கண்டதும், அவனைச் சந்திக்கும்படி ஓடிப்போய், காணாமற்போன அவனைத் தன் கரங்களால் அவர் கட்டி அணைத்துக்கொண்டார்.

இன்று, தமது பிள்ளைக்காகக் காத்திருக்கிறவரும், கிளாடியாவை அணைத்துக்கொண்டு அவளுடன் சேர்ந்து களிகூரும்படி அவளை நோக்கி ஓடி வந்தவருமான ஒரு நல்ல தகப்பனை நான் பார்க்கிறேன்.

ஆம், தோல்விகள் மத்தியிலும், தவறுகள் இருந்தாலும், பாவங்கள் செய்திருந்தாலும், ஆண்டவர் உன்னை எப்படிப்பட்ட நபராக வைத்திருக்க விரும்பினாரோ, அப்படிப்பட்ட நபராக நீ மாறுவது இப்போதும் சாத்தியம்! ஆண்டவர் உன்னை மறந்துவிடவில்லை. நீ எழும்பி அவரிடத்தில் ஓடு… அவரது கரங்கள் உனக்காகத் திறந்தும் விரித்தும் வைக்கப்பட்டுள்ளன!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இன்று, இந்தச் செய்தி என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. உண்மையில், நான் என் அப்பாவிடமிருந்து என் சொத்தைச் சுரண்டியிருந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மனிதனால் உருவாக்கப்பட்ட “மருந்துகளை” பயன்படுத்தி, போதைப்பொருள் உபயோகித்தல், பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் சூனியம் வைத்தல் ஆகிய பாவத்தில் விழுந்துபோனேன். ஆனால் என் முழு இருதயத்தோடும், மனதுடனும், சரீரத்துடனும், ஆத்துமா மற்றும் ஆவியுடனும் நான் கிறிஸ்துவிடம் மனந்திரும்பி வந்த தருணத்தில், என் இரட்சகர் எனக்காகத் திறந்த கரங்களுடனும் அளவற்ற அன்புடனும் காத்திருந்ததைக் கண்டேன். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, என் கன்னங்களில் நன்றி கண்ணீர் வழிந்தோடுகிறது. என்னைச் சுற்றி அற்புதங்கள் நடக்கின்றன, நான் என் ஆதி அன்புக்குத் திரும்பினேன், என் சிருஷ்டிகரின் அன்புதான் நான் சுவாசிக்கும் காற்றாக இருக்கிறது. அவர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை; அவரில் “என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய முடியும்.” (பிலிப்பியர் 4:13) ஆண்டவரின் அன்பு, இரக்கம், கிருபை, சுகம், விடுதலை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றால் மற்றவர்களை உற்சாகப்படுத்த என் பெயரோடு கூட, இதை உங்கள் வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுமாறு நான் அனுமதி அளிக்கிறேன்.(சார்லஸ்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!