ஆண்டவர் உன்னுடன் இருப்பதால், நீ பெரிய அளவில் கனவு காணலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னுடன் இருப்பதால், நீ பெரிய அளவில் கனவு காணலாம்!

ஒருவேளை உன் இருதயத்தில் உனக்கு ஒரு கனவு இருக்கலாம், ஆனால், அதேசமயத்தில் …

  • நிராகரிப்பா?
  • தோல்வியா?
  • திறமையின்மையா?
  • உன் விளையாட்டில் சிறந்து விளங்கவில்லையா?
  • இன்னும் நிறைய காரியங்கள்…

இவற்றைக் குறித்த பயம் உனக்கு இருக்கலாம்.

உன் ஆண்டவர் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர் மற்றும் உன்னைத் தம்முடைய சாயலில் உருவாக்கினார். எனவே, நீ படைப்பாற்றல்மிக்க ஒருவராய் இருக்கிறாய்! நீ புதுமையானவன்/புதுமையானவள்!

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கான புதிய பாதைகளில் நீ சென்று பெரும் மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறாய், கிறிஸ்துவைக் குறித்து மனுஷர்கள் கொண்டிருக்கும் மனநிலையையும் சிந்தனை முறைகளையும் நீ மாற்றுவாய்.

எதிரியின் தாக்குதல்களினாலோ அல்லது எதிர்ப்பின் நிமித்தமாகவோ நீ பின்வாங்காதே. விடாமுயற்சியுடன் செயல்படு!

பெரிய அளவில் கனவு காண், மற்றும் புதுமையாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்க பயப்பட வேண்டாம். இது பலவீனம் அல்ல… இது உனக்கு மிகப்பெரிய பலம்!

ஆண்டவர் உன் இருதயத்தில் வைத்திருக்கிற திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரின் மனதுருக்கத்தையும், தைரியத்தையும், கற்பனையையும் பெற்றுக்கொள்!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “பரிசுத்த ஆவியானவரே, இப்போதே, நான் உமது மனதுருக்கத்தையும், தைரியத்தையும், கற்பனையையும் பெற்றுக்கொள்கிறேன்! நான் படைப்பாற்றல் மிக்கவன்/மிக்கவள். நான் புதுமையானவன்/புதுமையானவள்! இயேசுவின் நாமத்தில் பயத்தைக் கடிந்துகொள்கிறேன்…சத்துரு என்னைத் தடுத்து நிறுத்த விடமாட்டேன்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!