ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்தவுடன், அக்குழந்தை பெற்றுக்கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று, அவனது/அவளது பெயர்தான். பெரும்பாலும் அந்தப் பெயர் அக்குழந்தைக்கு அர்த்தமும் அடையாளமும் கொடுக்கிறது. உதாரணமாக, எபிரேய மொழியில், காபிரியேல் என்ற பெயரின் அர்த்தம், “கர்த்தர் என் பெலன்” என்பது உனக்குத் தெரியுமா?

ஆண்டவர் உண்மையிலேயே உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார், அதனால்தான், “தேவன் நம்மோடிருக்கிறார்” என்ற அர்த்தமுள்ள இம்மானுவேல் என்ற பெயரை இயேசுவுக்குக் கொடுத்து, அதை அவரது அடையாளமாக மாற்றினார்.

வேதாகமம் கூறுகிறது: “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23)

ஒவ்வொரு முறையும் இயேசுவைப் பற்றி நினைக்கும்போது, அதாவது, இம்மானுவேலைப் பற்றி நினைக்கும்போது, அவர் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ நினைவுகூர வேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்பினார் என்பதை அறிந்த பின், இவ்வுணர்வு உனக்குள் எதைத் தூண்டுகிறது?

ஆம், அவர் உன்னுடன் இருக்கிறார். இப்போதும் எப்போதும் அவர் உன்னோடு கூடவே இருக்கிறார்! இயேசுவே, நீர் என்னோடு கூடவே இருப்பதற்கு நன்றி.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!