ஆண்டவர் உனக்கு முன் ஒரு திறந்த வாசலை வைத்துள்ளார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்கு முன் ஒரு திறந்த வாசலை வைத்துள்ளார்

“பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” (வேதாகமம், வெளிப்படுத்துதல் 3:7-8).

பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் (Givors) நான் போதராக இருந்த காலத்தின் தொடக்கத்தில், நகரத்தின் பிராட்டஸ்டன்ட் (Protestant) திருச்சபையில் ஆராதனை நடத்தும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் அநியாயமாக, ஈவு இரக்கமின்றி திடீரென வெளியேற்றப்பட்டோம். நான் மனமுடைந்து, கவலையுடன் இருந்தேன்… ஆராதனைகளை நடத்துவதற்கு இனி எங்களிடம் இடம் இல்லை என்பதை அனைவரும் அறிந்தால், எங்கள் இளைய சமுதாயம் இதை எப்படி அணுகும்?

எதிர்ப்பை சந்திப்பது தவிர்க்க முடியாதது…

  • இது நம்மிடமிருந்து… அதாவது நம்முடைய சந்தேகங்களிலிருந்தும், பயத்திலிருந்தும், புரிதல் இல்லாமையிலிருந்தும், மனமடிவிலிருந்தும் வரக் கூடும்…
  • இது மற்றவர்களிடமிருந்தும் வரலாம்: அதாவது, அவர்களின் விமர்சனங்கள், நெருக்கடி, நிராகரிப்பு போன்றவற்றிலிருந்தும் வரக் கூடும்.
  • எதிர்ப்பும் ஆவிக்குரிய ஒரு விஷயம்தான். ஆண்டவர் கட்டியெழுப்புவதை அழிக்க நினைக்கும் ஒரு எதிரி நமக்கு இருக்கிறான் என்பதைக் குறித்து விழிப்புடன் இரு! பிசாசு என்பவன் நிஜமான ஒருவன்தான், வேதாகமம் அவனை “நம் ஆத்துமாவின் சத்துரு” என்று அழைக்கிறது. உன்னுடைய வழியில் நீ அவனைச் சந்திக்கவில்லை என்றால், நீ அவனை அதிகம் தொந்தரவு செய்யாததுதான் காரணம். ஆகவே, நீ ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது உன் பாதையில் அவனைச் சந்திப்பதைக் குறித்து அதிர்ச்சியடைய வேண்டாம்!

இதோ ஒரு நல்ல செய்தி: ஆண்டவர் திறக்கும் கதவை சத்துருவால் மூட முடியாது.

மேலும் பிசாசு எப்பொழுதும் அவனையே திருப்பித் தாக்கும் வேலைகளையே செய்கிறான். பிராட்டஸ்டன்ட் திருச்சபையில் நாங்கள் செய்த ஊழியத்தை மூடியதன் மூலம் அவன் எங்களைத் தடுத்ததாக நினைத்தான். ஆனால் உண்மையில், இந்த சம்பவம் நாங்கள் எங்கள் சேவைகளுக்கான புதிய, பெரிய மற்றும் சவுகரியமான இடத்தைக் கண்டறிவதற்கான வழியை துரிதப்படுத்தியது!

இன்று இந்த ஜெபத்தை ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்: “இயேசுவே, உமக்கு நன்றி, ஏனென்றால் ஒவ்வொரு கதவுக்கான திறவுகோலும் உம்மிடம் உள்ளது. உம்மிடம் எப்போதும் ஒரு தீர்வு இருக்கிறது! என் கஷ்டங்களுக்கு நீர்தான் பதிலாக இருக்கிறீர், நீர் திறக்கும் கதவுகளை யாராலும் மூட முடியாது. இன்று, நான் உம்மை விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

எந்தத் தேவைகளுக்காக நீ ஆண்டவரை நம்பிக்கொண்டிருக்கிறாய்?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!