ஆண்டவர் உனக்கு ஒரு புது வாழ்வு வழங்குகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்கு ஒரு புது வாழ்வு வழங்குகிறார்!

“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5:17ஐப் பார்க்கவும்)

மறுபடியும் ஒரு காரியத்தைத் தொடங்க விரும்பாதவர் யார்? மேலே எழும்பும்படி, ஒரு பொத்தானை அழுத்தி முதலிலிருந்து மறுபடியும் காரியங்களைத் தொடங்கும்படி… இரண்டாவது வாய்ப்பைப் பெறாமல் இருப்பவர் யார்?

அது நிச்சயம் சாத்தியமாகும். அது இயேசுவால் கூடும்! அவர் எல்லாவற்றிற்காகவும் விலைக்கிரயம் செலுத்திவிட்டார், எல்லாவற்றையும் முன்கூட்டியே செய்து முடித்துவிட்டார். விசுவாசத்தோடும், தன்நம்பிக்கையோடும், நம்பிக்கையோடும் இந்தப் புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி. நீ ஒரு காலத்தில் இருந்த நபரைப்போல அல்ல – நீ எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறாறோ, அப்படிப்பட்ட நபராகவே இப்போது இருக்கிறாய்! நீ அவருடைய பிரசன்னத்தில் வாழவும், அவருடைய வல்லமையை அனுபவிக்கவும், அதிசயத்தை அனுபவிக்கவும் பிறந்திருக்கிறாய்.

இன்று நீ அவரிடமிருந்து வெகு தூரத்தில் சென்றுவிட்டாய் என்பதைப்போல உணர்வாயானால், அவரை உன் வாழ்வில் அழைப்பதற்கு இன்னும் உனக்கு வாய்ப்பு உண்டு. ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கவும், உன்னைக் குணப்படுத்தவும், மீட்டுக்கொள்ளவும் விரும்புகிறார். அவர் உன் இருதயத்தையும் உன் எண்ணங்களையும் மாற்றப் போகிறார். நீ அவருடைய பிள்ளையாய் இருக்கிறாய். நீ…

  • மகிழ்ச்சியாய் இருப்பாய் (வேதாகமத்தில் சங்கீதம் 16:11 ஐப் பார்க்கவும்)
  • செழிப்பாய் இருப்பாய் (வேதாகமத்தில் 3 யோவான் 1:2 ஐப் பார்க்கவும்)
  • வெற்றிபெற்ற நபராய் இருப்பாய் (வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 15:57 ஐப் பார்க்கவும்)

அவர் உன் மீது வைத்திருக்கும் அன்பானது, உனக்குள் இருக்கும் காரிருளைத் துளைத்து, உன் வாழ்வை மாற்றும் ஒரு வல்லமையாய் இருக்கிறது. அது உன் இருதயத்தைத் தொட்டு, உன் கண்ணீரைத் துடைத்து, உன் காயங்களை ஆற்றும் வல்லமையாய் இருக்கிறது.

என் அன்பரே, தேவனுடைய அன்பின் வல்லமையால் ஒரு புது வாழ்வை வாழ்வது சாத்தியமானதுதான்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!