ஆண்டவர் உனக்கு எவ்விதத்தில் நல்லவராய் இருக்கிறார்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்கு எவ்விதத்தில் நல்லவராய் இருக்கிறார்?

ஆண்டவர் நமக்கு நல்லவராய் இருக்கிறார், நண்பனே/தோழியே, அப்படித்தானே? ஆம், ஆண்டவர் நல்லவர்!
என்னுடன் சேர்ந்து ருசித்துப் பாரு…

  • இன்று காலை மீண்டும் ஒருமுறை சூரியனை உன்மீது உதிக்கச் செய்தார்.
  • அவர் இன்று தம்முடைய சகல இரக்கங்களையும் உனக்காகப் புதுப்பித்துள்ளார் (வேதாகமத்தில் புலம்பல் 3:23 ஐப் பார்க்கவும்).
  • அவரது சமாதானத்தை நீ முழுமையாக ருசித்து மகிழும்படி இந்த நாளை அவர் உனக்கு முன்பாக வைக்கிறார்.
  • இன்று மீண்டும் ஒருமுறை நீ நேசிக்கிற நபர்களுடன் இருக்கவும் மகிழ்ச்சியாய் இருக்கவும் அவர் உனக்கு உதவுகிறார்.
  • அவர் மூலம் நீ மக்களை நேசிக்கும்படிக்கு, நீ அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறார்.
  • அவர் மறுபடியும், இந்த நாளில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும், உன் அருகிலும் உன்னோடு கூடவும் இருப்பார்.
  • ஆம், மீண்டும் ஒருமுறை, உன் சகல தேவைகளையும் அவர் பூர்த்திசெய்வார். அவருடைய சத்தியம் மகத்தானது!

ஆம், என் நண்பனே/தோழியே, ஆண்டவர் நல்லவர்! அவர் உனக்கு நல்லவராகவே இருக்கிறார்!

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்!” (வேதாகமத்தில் சங்கீதம் 34:8ஐப் பார்க்கவும்)

கூடுமானால், சில நிமிடங்கள் ஒதுக்கி இந்தப் பாடலைக் கேட்கவும்: https://youtu.be/_z9EUug_fso … நாம் பாடி நம் நல்ல ஆண்டவரை ஒன்றாக இணைந்து ஆராதிப்போம்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “கர்த்தாவே, இவ்வளவு நாட்களாக நீர் எனக்கு நல்லவராகவே இருந்ததை எனக்கு நினைவூட்டியதற்கு மிகவும் நன்றி சொல்கிறேன். நான் ருசித்துப் பார்க்கிறேன்! இன்று உமது நாமம் மகிமைப்படுவதாக! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!

இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமைவதாக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!