ஆண்டவர் ஆளுகை செய்யட்டும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் ஆளுகை செய்யட்டும்

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” (சங்கீதம் 46:10)

நீ ஆண்டவரை ஆளுகை செய்ய அனுமதித்தால் எப்படி இருக்கும்?

அவர் ஆண்டவர் என்பதை ஏற்றுக்கொள். அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தார். இது அவருடைய படைப்பு. அவர்தான் இதை உருவாக்கினார், அவருக்குத்தான் இதன் மீது ஆளுகையும் அதிகாரமும் உள்ளது!

உன் கவலைகளை ஆண்டவரிடம் கொண்டு வந்து அவற்றை அவரிடம் விட்டுவிடு. உன்னை வருத்துவது என்ன என்பதை அவரிடம் கூறு. உன் பாரங்களை அவர் சுமக்க அனுமதி!

கவலையான எண்ணங்கள் திரும்பினால், அவருக்கு நன்றி சொல்லு, ஏனென்றால் அவருடைய பதில் உன்னிடத்திற்கு ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறது. நன்றியறிதலின் ஜெபங்கள், உன்னை அவருடைய பிரசன்னத்தின் மீதும் அவருடைய வாக்குறுதிகளின் மீதும் கவனம் செலுத்த உன்னை அனுமதிக்கிறது.

என்னுடன் அறிக்கையிட்டு: “படைப்பின் ஆண்டவரே, சர்வவல்லமையுள்ள தேவனே, நீரே தெய்வம். உமக்கு எல்லா அதிகாரமும், கட்டுப்பாடும் உள்ளது. என் சுமைகளை உன்னிடம் கொண்டு வந்து உன் பாதத்தில் வைக்கிறேன். நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் இந்த தருணத்திலிருந்து, என்னுடைய இந்த சூழ்நிலைக்கு நீர் தான் பொறுப்பேற்று இருக்கிறீர். நீர் என்னை நிறையச் செய்வதால் நான் உம்மை துதித்து உமக்கு நன்றி கூறுகிறேன்! உம்முடைய பதில் ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!