ஆண்டவர் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்!

“அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.” (ஆதியாகமம் 1:11-12)

ஆண்டவர் இந்த உத்தரவை வழங்கியதிலிருந்து – வேறு வார்த்தைகளில் கூறினால், உலகம் உருவானதிலிருந்து – பூமியானது தாவரங்கள், விதைகள் மற்றும் பசுமையைக் கொண்டுவருவதை நிறுத்தவில்லை. இயற்கையானது வளர்ச்சியை நிறுத்தவில்லை. உண்மையில், மனிதகுலத்தின் கை தொடாத எந்த இடத்திலும், இயற்கை கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இயற்கை மீண்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இயற்கை தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதை விட, நமது பிரபஞ்சத்தை உருவாக்கும் தனிமங்களின் கூட்டு, தெய்வீக கட்டளைக்கு தொடர்ந்து கீழ்ப்படிகிறது, இவை அனைத்திற்கும் சொந்தக்காரரான ஒருவர் உச்சரித்த வார்த்தையின்படி.

நீ அவருடைய குரலுக்கு இசைந்து நடப்பதால், உனக்கிருக்கும் உறுதிகள் என்னென்னெவென்றால்…

  • உனக்காக அனுப்பப்பட்ட அவருடைய வார்த்தை அனுப்பப்பட்டதை நிறைவேற்றாமல் வெற்றிடமாகத் திரும்பாது. (வேதாகமம், ஏசாயா 55:11 பார்க்கவும்)
  • அவருடைய வார்த்தை நிச்சயமாக உனக்கு நிறைவேறும். (ஆபகூக் 2:3 ஐப் பார்க்கவும்)
  • ஆண்டவர் உனக்கு சொன்னதையும், அவர் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்! (2 நாளாகமம் 6:15 பார்க்கவும்)

நீ ஆசீர்வதிக்கப்பட்டு அவருடைய ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிராய். நீ ஆண்டவரின் கிருபைக்கும் வல்லமைக்கும் நல்ல ஒரு சாட்சியாக இருப்பாய் என்று நான் நம்புகிறேன்! சந்தேகத்தைத் தூண்டும் அந்த குரலை கேட்காதே; பயத்தின் கதவை மூடு. உனக்கான அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை நீ அனுபவித்துக்கொண்டிருக்கிறாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!