ஆண்டவர் அனுதினமும் உன்னை பாதுகாக்கிறார்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
இரவில் நீண்ட நேரம் நன்றாக உறங்கிய பிறகு, இன்று காலையில் புத்துணர்ச்சியுடன் எழும்பியிருக்கிறாய் என்று நான் நம்புகிறேன். இரவு நேரத்தில், எல்லோரையும் போலவே, நீயும் முழுவதுமாக உறக்கத்தில் ஆழ்ந்திருப்பாய்.
நாம் ஆழ்ந்து உறங்கும் இந்தத் தருணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை… அந்த நேரத்தில் நம் செவிகளில் எதுவும் கேட்பதில்லை, நாம் எதையும் உணர்வதில்லை, எதையும் நம்மால் செய்ய முடிவதில்லை… சுருக்கமாகச் சொன்னால், அந்த நேரத்தில் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை!
ஆனால் ஆண்டவர்… அவர் ஒருபோதும் தூங்குவதில்லை! சங்கீதம் 121:4 இதைப் பற்றிக் கூறுகிறது…
“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.”
ஆண்டவர் எப்போதும் உன் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். உனக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்திலும், நீ அறியாத வேளையிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவர் திடீரென்று உன்னை எழுப்பிவிட மாட்டார். அவர் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்… அவர் உன்னையும் பாதுகாக்கிறார்!
இந்த சங்கீதத்தின் 5 வது வசனம் கூட, கர்த்தர் நம்மைக் காப்பவர் என்றும், அவர் நமது பாதுகாவலர் என்றும் நமக்கு உறுதியளிக்கிறது.
அவர் நமது பக்கத்தில் இருக்கிறார்.
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.”
நீயும் நானும் நிம்மதியாகத் தூங்கலாம், இரவில் நீண்ட நேரம் ஓய்வெடுக்கலாம்…நம்முடைய பாதுகாவலர் இருக்கிறார், அவர் உண்மையுள்ளவர், அவர் நம்மோடு இருக்கிறார், அவர் நம்மை விட்டு விலகுவதில்லை.
என் நண்பனே/தோழியே, ஆண்டவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார், ஒவ்வொரு நொடியும் உன்னைக் கரிசனையோடு கவனித்து வருகிறார்.