ஆண்டவர்தாமே உன் ஜீவனைக் காப்பவர்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர்தாமே உன் ஜீவனைக் காப்பவர்!

இன்று, 27ஆம் சங்கீதத்தின், 2வது வசனத்திலிருந்து நமது தொடரை ஆரம்பிக்கிறோம்.
“என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.” (வேதாகமம், சங்கீதம் 27:2)

சத்துருவானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றித்திரிகிறான் என்று வேதாகமம் சொல்கிறது.

உனக்கு ஒரு எதிரி இருக்கிறான். இதுதான் நிஜம். அவன் உன்னை அழிக்க முற்படுகிறான். சில சமயங்களில், இதைச் செய்ய, அவன் கொடூரமான மிருகங்களைப் போல நடந்துகொள்ளும் பொல்லாத மக்களைப் பயன்படுத்துகிறான். இருப்பினும், மக்கள் உன் எதிரிகள் அல்ல என்பதை நீ உணர வேண்டும். நாம் மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் எதிராக அல்ல, மனிதனுக்கு எதிராகவும் அல்ல, மாறாக துரைத்தனங்களுக்கு எதிராகவும், வல்லமைகளுக்கு எதிராகவும், அந்தகாரலோகாதிபதிகளுக்கு எதிராகவும், ஆகாயத்தில் உள்ள பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கு எதிராகவும் போராடுகிறோம் என்று வேதம் சொல்கிறது. (எபேசியர் 6:12 பார்க்கவும்).

உனக்குள் இருப்பவர் உனக்கு எதிராக இருப்பவனை விட பெரியவர் என்பதை அறிந்து கொள். நீ நிர்மூலமாகமாட்டாய் மாறாக, சத்துருவானவன் சீக்கிரத்தில் தரைமட்டும் தாழ்த்தப்பட்டு முறியடிக்கப்படுவான். இதை நம்பு மற்றும் அறிக்கையிடு!

சங்கீதம் 121:7ல் வேதாகமம் சொல்கிறது, “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்..”

ஆம், ஆண்டவர் உன்னைக் காப்பவராய் இருக்கிறார்!

என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “ஆண்டவர், இயேசுவின் நாமத்தில், நான் தரைமட்டும் தாழ்த்தப்பட்டு தோற்கடிக்கப்படமாட்டேன்! என் எதிரி ஏற்கனவே தோற்றுவிட்டான்! நீரே, நீர், ஒருவரே, இயேசுவே, என் ஜீவனைக் காப்பாற்றுகிறீர். நான் உம்மை முழுமையாக நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!