ஆண்டவருடைய வார்த்தை ஜீவனின் ஊற்று

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய வார்த்தை ஜீவனின் ஊற்று

“என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.” (நீதிமொழிகள் 4:10)

ஆண்டவருடைய வார்த்தை ஒரு சீரான, ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தை ஒருபோதும் வறண்டு போகாத ஒரு நதியைப் போன்றது. இந்த ஆவிக்குரிய உணவு உன் ஆத்துமாவை பலப்படுத்துகிறது மற்றும் நீ ஆண்டவருடன் அனுதினமும் நடப்பதை உறுதிப்படுத்துகிறது. இதில் ஒரே நேரத்தில், இனிமையும் உள்ளது வல்லமையும் உள்ளது. இது உன்னை விடுவிக்கிறது, உன்னை குணப்படுத்துகிறது, உன்னை போஷிக்கிறது!

இது உன் ஆத்துமாவிற்கு ஒரு பொக்கிஷம், எந்த நேரத்திலும் நீ கீழ்கண்டவற்றிக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு வல்லமையான ஆயுதம்…

  • ஆண்டவருடைய அன்பை நீ நினைவுகூர
  • அவருடைய ஆறுதலைப் பெற
  • அவருடைய விசுவாசத்தை அறிக்கையிட
  • அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள
  • உன் ஆத்துமாவை நிலைப்படுத்தி, பெலப்படுத்த.

என் அன்பரே, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை அறிக்கையிட்டு தியானிக்க உன்னை அழைக்கிறேன்; அவரது பிரசன்னம் மற்றும் சமாதானம் நிறைந்த வாழ்க்கைக்கு இதுவே திறவுகோலாகும். இது உன்னுடைய உரிமை சொத்து, உன்னை படைத்தவர் உனக்கு அளித்த பரிசு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!