ஆண்டவருடைய “ரேமா”வைக் (வார்த்தையை) கேள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய “ரேமா”வைக் (வார்த்தையை) கேள்!

கிரேக்க மொழியில், “வார்த்தை” என்பதைக் குறிக்க இரண்டு பதங்கள் உள்ளன:

  • “லோகோஸ்” என்ற வார்த்தையானது ஆண்டவரின் எழுதப்பட்ட வார்த்தையைக் குறிக்கிறது (வேதாகமத்தில் நீ வாசிப்பவை)
  • “ரேமா” என்ற வார்த்தையானது ஆண்டவரால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையைக் குறிக்கிறது, இது ஒருவருக்கு தனிப்பட்ட விதத்தில் உரைக்கப்படுகிற வார்த்தை.

நான் ஆண்டவருடைய “ரேமா” வார்த்தையைக் கேட்க விரும்புகிறேன். என் உள்ளத்தின் ஆழத்தில் ஆண்டவர் பேசும்போது, ​​என் இருதயத்தில் கேட்கும் வார்த்தைகள் இவைகளே.‌ ஒரு நாள் முழுவதுமோ, ஒரு வாரம் முழுவதுமோ அல்லது ஒரு வாழ்நாள் முழுவதுமோ கூட என்னை வழிநடத்தக்கூடிய அளவிற்கு இந்த “ரேமா” மிகவும் வல்லமை வாய்ந்தது.

இன்று, உன் செவியை (உன் இருதயத்தின் செவியை) திறந்து வைத்து, உனக்கான ஆண்டவரின் “ரேமா”வைக் கேட்கும்படி உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். அவர் மட்டுமே உன்னை நன்றாக அறிந்தவர், இப்போது நீ கேட்க வேண்டிய வார்த்தைகள் என்ன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். அவருடைய “ரேமா” உன்னை உற்சாகப்படுத்தி, இந்த நாள் முழுவதும் உன்னை வழிநடத்தட்டும்!

நண்பனே/தோழியே, இன்று மீண்டும் இயேசு உன் இருதயத்தில் பேசி உனக்கு ஊழியம் செய்யட்டும்.

பரிசுத்த ஆவியானவர்… கிரியை செய்கிறார்: இந்தப் பாடலை என்னோடு கூட சேர்ந்து பாடி ஆராதிக்கும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்: https://youtu.be/4H0U9TIvFHo

”என்னோடு பேசும் இயேசுவே
என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால், என் வாழ்க்கை தொலைந்து போகுமே…”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஆண்டவரின் அன்பைப் பற்றித் தொடர்ந்து எனக்கு நினைவுபடுத்தியதற்காக நான் மிகவும் நன்றி கூறுகிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நான் மிக மோசமான நிலையில், என் வாழ்வு இருண்டுபோன ஒரு சூழ்நிலையில் மனச்சோர்வை அடைந்தேன். என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து யோசித்து வந்தேன். நான் சோர்வாகவும் ஏமாற்றமாகவும் இருந்தேன்… நான் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்கான காரணங்கள் பல இருந்தாலும், தொடர்ந்து வாழ எனக்கு பெலன் இல்லாதிருந்தது.. ஒரு நாள் இரவில் நான் மிகவும் சத்தமாக அழுதேன், அன்று கிறிஸ்தவ தொலைக்காட்சியின் மூலம் ஆண்டவர் என்னோடு தெளிவாகப் பேசினார். எனக்குள் இருந்த ஏதோ ஒரு இருள் திடீரென வெளியேறியது, என் அறை முழுவதும் பிரகாசமான வெளிச்சத்தால் நிரம்பியது…அன்று இரவிலிருந்து நான் வித்தியாசத்தை உணர்ந்தேன்; ஆண்டவர் என் கூப்பிடுதலுக்குச் செவிகொடுக்கிறார், நான் வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன். நன்றி.” (லீனா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!