ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன?

வேதாகமத்தில் ஆண்டவர் கொடுத்திருக்கிற அநேக வாக்குத்தத்தங்களை நாம் காண்கிறோம். ஆனால் அவர் செய்த மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்னவென்று உனக்குத் தெரியுமா? அது உன்னுடைய வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையையும், மற்றவர்களின் வாழ்க்கையையும் நிலைநிறுத்தும் வாக்குத்தத்தம்.

ஆண்டவர் என்ன செய்தார் என்பதையும், இன்றும் நாம் என்னென்ன பயன் பெறுகிறோம் என்பதையும் என்னுடன் சேர்ந்து கூர்ந்து கவனி!

ஆதியாகமம் 12:3: “… பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”

ஏன் இந்த வாக்குத்தத்தம் உனக்கும் எனக்கும் மற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது?

இயேசு ஆபிரகாமின் சந்ததி என்பதால், இயேசுவின் மூலம் நீயும் நானும் உட்பட பூமியின் அனைத்து குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! (மத்தேயு 1:1-17)

இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் பதில். இந்த வாக்குத்தத்தத்தின் முழு நிறைவேற்றமும் ஆசீர்வாதமும் அவரில் உள்ளது!

அப்போஸ்தலர் 4:12: “அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”

நம்முடைய நித்திய இரட்சிப்பு இயேசுவில் இருப்பதால், அவரே நமக்கு மிகச்சிறந்த வாக்குத்தத்தமானவர். ஒருநாள், நாம் இக்கரையை விட்டு மறுகரைக்குச் செல்வோம். நம்மைச் சுமந்து செல்லும் ஒரே ஒரு வாக்குத்தத்தமும், இவ்வுலக நம் வாழ்க்கையை நித்தியத்துடன் இணைக்கும் பாலமுமாக இருப்பது இந்த ஒரு வாக்குத்தத்தமேயாகும்! அதுவே இயேசு கிறிஸ்துவில் காணப்படும் இரட்சிப்பின் வாக்குத்தத்தம்.

மற்ற அனைத்து வாக்குத்தத்தங்களும் இயேசுவில் முத்திரிக்கப்பட்டு உள்ளன! இந்த மிகச்சிறந்த வாக்குத்தத்தம் இல்லாமல், அவைகள் மட்டும் இருந்து பயனில்லை. இயேசுவே உன் மிகச்சிறந்த வாக்குத்தத்தம். மேலும் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உன் மிகச்சிறந்த பலமும் ஆதரவும் அவரே ஆவார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!