ஆண்டவருடைய மகிமை உன் வாழ்வில் வெளிப்படுவதாக!
முகப்பு ›› அற்புதங்கள் ››
சார்லஸ் ஸ்பர்ஜன் ஒருமுறை கூறினார், “ஆண்டவருடைய அனைத்து படைப்புகளிலும் அவரது சிறந்த வடிவமைப்பு அவரது மகிமையின் வெளிப்பாடே ஆகும்.”
நீ கடினமான மற்றும் வேதனையான நேரத்தை கடந்து செல்கிறாயா?
இன்று உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். உன் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் சிரமங்கள் மூலம் ஆண்டவர் தமது மகிமையை வெளிப்படுத்தப் போகிறார் என்று நான் நம்புகிறேன்.
ஆண்டவர் புயலை அமைதிப்படுத்துவதைப் பார்க்க வேண்டுமானால்… முதலில் புயல் வர வேண்டும். அவர் ஒரு மலையைத் தகர்த்து தரைமட்டமாக்குவதைப் பார்க்க வேண்டுமானால்… முதலில் ஒரு மலை முன்னால் இருக்க வேண்டும். ஆம், ஆண்டவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்துவதைப் பார்க்க, ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நடப்பது பெரும்பாலும் முதலில் நடக்க வேண்டும்.
தைரியமாக இரு… ஆண்டவர் ஒருவரே தீமையை நன்மையாக மாற்றி, எதிர்மறையான ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் நேர்மறையான ஒன்றைக் கொண்டு வரக்கூடியவர். நீ நிராகரிப்பு, நேசித்தவரின் இழப்பு, வறுமை, நோய், உன்னை வெறுக்கத்தக்க வார்த்தைகள் அல்லது முழுவதுமாக கைவிடப்படுதல் போன்றவற்றை எதிர்கொண்டாலும்… ஆண்டவர் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்தும் உனக்கு நன்மையானதைத் தர முடியும்.
வேதாகமம் கூறுகிறது, “இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்…” (உபாகமம் 5:24)
இந்தப் பத்தியில், மோசே இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசுகிறார், மேலும் ஆண்டவர் என்ன செய்தார், அவர் என்ன சொன்னார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
தேவன் ஆண்டவராய் இருக்கிறார் என்பதையும் அவர் மாறிவிடவில்லை என்பதையும் உனக்கு நீயே நினைவுபடுத்திக்கொள்…! அவர் கடந்த காலத்தில் தம்முடைய மகிமையை உனக்குக் காண்பித்திருந்தால் (உனக்கு இரட்சிப்பு, நித்திய ஜீவன் மற்றும் அவரில் ஒரு புதிய ஜீவனைக் கொடுக்கத் துவங்கியிருப்பாரானால்), இன்றும் வரும் நாட்களிலும் அவர் அதை மீண்டும் செய்வார் என்ற நிச்சயத்தோடு இரு.
ஆம், ஆண்டவர் இன்றும் உன்னுடன் இருக்கிறார். நீ தனியாக இல்லை, நீ ஒருபோதும் தனியாக இருக்க மாட்டாய்!
ஆண்டவருக்கே துதி உண்டாவதாக: “அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சலை நான் ஒவ்வொரு நாளும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்! நான் என் வாழ்க்கையில் ஆண்டவரைக் கண்டுபிடித்ததால், காரியங்கள் சரியாக நடக்கத் தொடங்கிவிட்டன. என் வாழ்க்கையில் சண்டைகளும் போராட்டங்களும் குறைந்திருப்பதாக நான் நம்புகிறேன். நான் பின்பற்ற வேண்டிய ஒரு பாதை உள்ளது. எனக்கும் என் குடும்பத்திற்குமான அழகான எதிர்காலத்தை நான் பார்க்கிறேன். உங்களது ஞானமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.” (ராபி)