ஆண்டவருடைய தூய்மையான கண்ணாடியில் உங்களைப் பாருங்கள் :)

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய தூய்மையான கண்ணாடியில் உங்களைப் பாருங்கள் :)

இன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, கண்ணாடியில் ஒரு முறை உங்களை பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்வீர்கள் என்று யூகிக்கிறேன். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா… உங்களின் ஆழ் மனதிற்கான ஒரு கேள்வி… நீங்கள் என்ன கண்ணாடியை பயன்படுத்துகிறீர்கள்?

நான் ஒருவருடைய சாட்சியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அவர் இவ்வாறு எழுதியிருந்தார், “நான் நிராகரிப்பினால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்தேன், இயலாமை உடைய ஒரு நபராகதான் என்னை நானே கண்டேன். இன்று, ஆண்டவரின் கண்ணாடியில் என்னைப் பார்க்கவும், என் தோல்விகளை வென்றெடுக்கவும், என் ஆண்டவர் எனக்காக இருக்கிறார் என்னுடன் இருக்கிறார் என்பதை உணரவும் கற்றுக்கொண்டுள்ளேன். அவரே என் கன்மலை, என் கோட்டை, என் துருகம் என்பதையும், நான் ஒவ்வொவொரு நாளும் என் வாழ்க்கையை அவர் மீது கட்டுகிறேன் என்பதையும் கற்றுக்கொள்கிறேன்.

இந்த நபர் உணர்ந்தது போல, நீங்களும் ஆண்டவருடைய கண்ணாடியில் உங்களை பார்ப்பது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஏன் தெரியுமா? அவருடைய கண்ணாடி, அவருடைய வார்த்தையின் கண்ணாடி, மிகவும் துல்லியமானது, பிழையில்லாதது. அது மாற்றியோ, சுருக்கியோ, பெரிதாக்கியோ காண்பிக்கும் கண்ணாடியல்ல. அது உண்மையை காட்டும் கண்ணாடி. (வேதாகமம் யோவான் 17:17ஐ  பாருங்கள்)

ஆண்டவர் அவருடைய வார்த்தையின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கவும், உங்களை நிலைநிறுத்தவும், உங்கள் சுபாவத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளவும், உங்களை வழிநடத்தவும் அவர் விரும்புகிறார். நீங்கள் தினமும் வேதாகமத்தை தவறாமல் வாசித்து, ஆண்டவரிடமிருந்து வரும் செய்தியை எழுதி வைத்துக்கொள்ளுமாறு நான் உங்களை வற்புறுத்துகிறேன். “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (வேதாகமம் சங்கீதம் 119:9)

இதற்கு பதிலளிக்கும் விதமாக என்னுடன் ஜெபிக்க விரும்புகிறீர்களா?…ஆண்டவரே, துல்லியமான கண்ணாடியான உம்முடைய வார்த்தைக்காக நன்றி. உம் கண்களின் வழியாய் என்னை நான் பார்க்க எனக்குக் கற்றுத்தாரும், உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், அதன் மூலம் நீர் எனக்குக் கற்பிக்க விரும்புவதை புரிந்துகொள்ளவும் எனக்கு உதவி செய்யும். நீர் எனக்காக முன்கூட்டியே திட்டமிட்ட வாழ்க்கையை நான் வாழும்படிக்கு, உம் வார்த்தையின் மூலம் நான் கற்றுக்கொண்டவைகளை நடைமுறைப்படுத்த எனக்கு பெலன் தாரும். எல்லா மகிமையும் கனமும் உமது நாமத்திற்கே! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!