ஆண்டவரின் மகிழ்ச்சி எப்பொழுதும் கிடைக்கும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரின் மகிழ்ச்சி எப்பொழுதும் கிடைக்கும்!

எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் யாரவது ஒருவரை உனக்குத் தெரியுமா? இந்த நபரின் மகிழ்ச்சி எந்த சூழ்நிலையிலும் சிதைந்து போகாத ஒன்றைப்போல தோன்றுகிறதா?

இது விசித்திரமாகத் தோன்றலாம், ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம், “எப்படி அவளால் இதைச் செய்ய முடிகிறது? அவளுடைய ரகசியம் என்ன?” என்று.

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க உனக்கு வாய்ப்பு உள்ளது என்பது உனக்குத் தெரியுமா?

வேதாகமம் பிலிப்பியர் 4:4ல் இப்படி கூறுகிறது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”

இந்த வசனத்தை எழுதியபோது அப்போஸ்தலர் பவுல் சிறையில் இருந்தார், இது அவருடைய அறிக்கைக்கு இன்னும் மதிப்பை கூட்டுகிறது. சிறையில் இருந்தாலும், மிக மோசமான சிரமங்களிலும் கூட, மகிழ்ச்சி அடைவது சாத்தியம். இது மனிதத்தன்மையில் எளிதானது அல்ல… ஆனால் தெய்வீகமாக சாத்தியம்!

மகிழ்ச்சியில் இருப்பது ஒரு விருப்பத் தேர்வு என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். உன் மகிழ்ச்சி உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல, ஆனால் உனக்குள்ளும் உன்னுடனும் இருக்கும் ஆண்டவரைச் சார்ந்தது.

வேதாகமம் கூறுகிறது, “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.” (ஏசாயா 43:2)

கடினமான நேரங்களை சந்திக்கும்போது, நீ அவருடன் அவற்றைக் கடந்து செல்கிறாய் என்பதால் நீ மகிழ்ச்சியடையலாம்.

*|FNAME|*, நீ எதைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும், ஆண்டவரின் மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது.

நான் உன்னை நேசிக்கிறேன், பாராட்டுகிறேன். வலிமையுடனும் தைரியத்துடனும் தொடர்ந்து செல்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!