ஆண்டவரின் பார்வையில், வெற்றி என்றால் என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரின் பார்வையில், வெற்றி என்றால் என்ன?

அடுத்த வாரத்தில், ஆண்டவர் மிகவும் நேசிக்கும், அவர் உள்ளத்திற்கு மிகவும் அருகில் வைத்திருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசப்போகிறோம்… உறவுமுறைகளை பற்றி.

இன்று, ஆண்டவரிடம் நான் ஒருமுறை பேசியதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது என் வாழ்க்கையில் உறவுகளுக்கான இடத்தைப் பற்றி எனக்கு கற்பித்தது.

ஒரு நாள், நான் ஒரு காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ​​ஆண்டவர் என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டார்: 

“எரிக், ஒரு ஊழியத்தின் வெற்றியை நீ எவ்வாறு அளவிடுவாய்?”

 • “மிகவும் சுலபம்,” என்று சொன்னேன். “கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது! அநேகமான மக்கள். மிகுதியான கனிகள்!”
 • “நான் எப்படி வெற்றியை அளவிடுகிறேன் என்பதை அறிய விரும்புகிறாயா?” என்று கர்த்தர் என்னிடம் கேட்டார்.
 • “நிச்சயமாக”, என்று சொன்னேன்.
 • “உன்னை பொறுத்தவரை, உன் வெற்றியின் அளவு ஒரு பெரிய எண்ணிக்கையில்… எனக்குள் எத்தனை நபர்கள் உள்ளனர்?”
 • “மூன்று: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”.
 • “இது எண்ணிக்கையில் பெரியதா?”
 • “இல்லை, சிறிய எண்தான்… ஆனால் நீர் பெரிய கடவுள்!”
 • “நான் மனிதனை உருவாக்கியபோது, ​​எத்தனை நபரை படைத்தேன்?”
 • “ஆதாம்… என்கிற ஒருவனை மட்டும் தான்.”
 • “அது எண்ணிக்கையில் பெரியதா?”
 • “இல்லை…”
 • “நான் ஆதமுக்கு ஒரு துணையை உருவாக்கியபோது, எத்தனை படைத்தேன்?”
 • “ஏவாள்… என்ற ஒருத்தியை மட்டும்தான்.”
 • “நான் வெற்றியை அளவிடும் விதம் நீ அளவிடுவது போல இல்லை, எரிக் …”

அன்றைய தினம் நான் உணர்ந்தேன், ஆண்டவருக்கு வெற்றியின் அளவுகோள்… உறவுகள். ஒரு “மிகப்பெரிய” தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாம் செய்யும் காரியங்கள் நம் உறவுகளை உடைத்து சேதப்படுத்தியது என்றால், அது அர்த்தமில்லாதது. ஆண்டவர் உங்களை நேசிக்கிறார், நீங்கள் நன்மையான, வலுவான உறவுகளை பெற்று மற்றவர்களுடன் சமாதானத்தோடு இருக்க விரும்புகிறார். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (வேதாகமம், ரோமர் 12:18)

வாழ்க்கையின் இந்த பகுதியில் உங்களுக்கு சிரமங்கள் இருக்கிறதா? அப்படியானால், என்னுடன் ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்…”ஆண்டவரே, உம் திருமுன் நான் தாழ்மையோடு வருகிறேன், உம்மை அயராது தேடுபவர்களுக்கு நீர் தக்க கைமாறு அளிப்பவர் என்பதையும், நீரே ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கும் கடவுள் என்பதையும் நம்பி வருகிறேன். ஆண்டவரே, என்னைச் சுற்றியுள்ள என் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள்களுடன் நன்மையான, வலுவான உறவில் இருக்க எனக்கு உதவி செய்யும்…என்னுடைய உறவுகள் அனைத்தும் உம்முடைய அன்பிலும் கிருபையிலும் நிறைந்திருக்க ஜெபிக்கிறேன்.இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!