ஆண்டவரிடம் நன்மையை எதிர்பார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரிடம் நன்மையை எதிர்பார்!

“நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.” (வேதாகமம், சங்கீதம் 27:13)

தாவீது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தான்: அவன் ஜீவனுள்ளோர் தேசத்தில் கர்த்தருடைய நன்மையைக் காணப்போகிறான் என்று! அவனுடைய நம்பிக்கை, பூமியில் இந்த வாழ்க்கைக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் மட்டுமல்ல, ஆண்டவர் தன்னைச் சந்திக்கப்போகிறார், பூமியில் அவருடைய இரக்கங்களைப் புதுப்பிக்கப்போகிறார் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (வேதாகமம், புலம்பல் 3:22 பார்க்கவும்)

காலைதோறும் கர்த்தருடைய இரக்கங்கள் துணை நிற்கின்றன.

உன் இரக்கமுள்ள ஆண்டவர் இன்றும் உன்னை அன்புடன் பார்க்கிறார்.

நீயும் அதே அன்புடன் மற்றவர்களைப் பார்க்கவும், உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மையும் இரக்கமும் நிறைந்த ஒரு நபராக நீ இருக்கவும் அவர் இன்று உன்னைப் புதுப்பிக்க விரும்புகிறார்!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “கர்த்தாவே, உமது இரக்கங்களும் உமது நன்மைகளும் பரலோகத்தில் எதிர்கால நாளுக்காக மட்டும் அல்ல… அவை இப்போதைக்கு, இந்த பூமியிலும் உள்ளன! நான் என் ஆத்மாவுடன் பேசுகிறேன், இருதயத்தை கலங்காமல் வைத்துக்கொள்ள நினைவூட்டுகிறேன். கர்த்தாவே, நீர் என் வாழ்வில் ஊற்றியிருப்பதைப்போல, நான் மற்றவர்களின் வாழ்விலும் இவைகளை ஊற்றும்படிக்கு இன்றே என்னைப் புதுப்பித்தருளும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!