அவர் குணமாக்கும் கர்த்தர்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவர் குணமாக்கும் கர்த்தர்!

“யெகோவா ரபா” என்பதன் அர்த்தம் என்னவென்று உனக்குத் தெரியுமா? “பரிகாரியாகிய கர்த்தர்” என்பதுதான் இதன் அர்த்தமாகும். பரிசுத்த வேதாகமத்தில் யாத்திராகமம் 15:22-27ல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தம் மக்களுடன் ஆண்டவர் ஒரு உடன்படிக்கை செய்கிறார்: “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

கர்த்தர் தம்மை “யெகோவா ரபா”, கர்த்தர் குணப்படுத்துகிறவர் என்னும் இந்தப் பெயரால் வெளிப்படுத்துகிறார். உண்மையான பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் அவர் இங்கே அவ்வாறு வெளிப்படுத்துகிறார். யாத்திராகமம் 23:25ல் கூறப்பட்டுள்ளதுபோல், வேதாகமத்தில் உள்ள பல பகுதிகள் ஆண்டவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையிலான இந்த உறவை விவரிக்கிறது, உதாரணமாக: “உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.’’

உபாகமம் 7:12-15ல் இதே வாக்குத்தத்தத்தை அவர் புதுப்பிக்கிறார்: “…இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், …. கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார் …”

ஆண்டவர் குணப்படுத்துகிறவர். ஆகவே, இன்று, உன்னை நேசிக்கும் மற்றும் உனக்கு சிறந்ததை விரும்பும் இந்த அற்புதமான தேவனை ஏற்றுக்கொள். அவர் உன் வாழ்க்கையில் தமது குணப்படுத்துதலை வெளிப்படுத்துகிறார், சரீரப்பிரகாரமாக மட்டுமல்ல, ஆவிக்குரிய நிலை, உன் உணர்வு, உறவு மற்றும் பொருளாதார நிலை என எல்லாவற்றிலும் கூட வெளிப்படுத்த விரும்புகிறார். அவர் உன்னைப் புதுப்பிக்க விரும்புகிறார்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!