அவர் உன்னைக் கண்டுபிடிக்கட்டும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவர் உன்னைக் கண்டுபிடிக்கட்டும்!

ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகரின் இந்தக் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… “நாங்கள் சிறு வயதில், ஒளிந்து விளையாடும் விளையாட்டை விளையாட விரும்பினோம். விளையாடுபவர்கள் என்னைக் கண்டுபிடிக்கவில்லை என்பது பிரச்சனை அல்ல… அவர்கள் என்னைத் தேடவில்லை என்பது தான் பிரச்சனை.”

இன்று, நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். நீங்களும் நானும் ஆண்டவரிடமிருந்து மறைந்து வாழக் கூடாது… மாறாக, அவர் நம்மைக் கண்டுபிடிக்க நாம் அனுமதிக்க வேண்டும்!

நகைச்சுவை நடிகர் தனது சோகமான கதையில் சொன்னது போலல்லாமல், ஆண்டவர் நிச்சயமாகவே நம்மைத் தேடுகிறார் என்பது உண்மை… அவர் மிகுந்த மன உறுதியுடன் நம்மைத் தேடுகிறார்!

“ஆனால், நான் ஆண்டவரிடமிருந்து எப்படி மறைந்து கொள்ள முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவருக்கு நம்மைப் பற்றிய அனைத்தும் தெரியும், நம் எண்ணங்களில் தோன்றும் மிகச்சிறிய காரியங்கள் கூட அவருக்குத் தெரியும்… எனவே, நாம் அவரிடமிருந்து உண்மையில் எப்படி மறைந்து கொள்ள முடியும்?

நம் இருதயத்திற்குள் ஆழமாக இருப்பவைகளை நாம் அவரிடம் சொல்லாதபோது, நாம் ஆண்டவரிடமிருந்து மறைந்து கொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், “இந்தப் பிரச்சனையை நானே தீர்த்துக்கொள்ள முடியும்… நான் ஆண்டவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று நமக்குள் கூறிக்கொள்கிற பொய்யால் நாம் கண்மூடித்தனமாக இருப்பது போல் தோன்றுகிறது.

ஆண்டவரை நீ ஒருபோதும் தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். மாறாக, உன் உணர்வுகள், எண்ணங்கள், கேள்விகள்… எதையும் மறைக்காமல், இந்த நேரத்தில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே நீ அவரிடத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உன் எல்லாக் கவலைகளையும் அவர் மீது வைத்து விடும்படி அவர் காத்திருக்கிறார்.

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (வேதாகமம், 1 பேதுரு 5: 7)

ஆண்டவர் உன்னைக் கவனித்துக்கொள்வதை மிகவும் விரும்புகிறார். அவரைக் காத்திருக்க வைக்க வேண்டாம்! அவர் உன்னைச் சந்தித்து உன்னுடன் பேச விரும்புகிறார். உன் வாழ்க்கையின் சிறிய விஷயங்கள் உட்பட எல்லாவற்றையும் அவர் உன்னுடன் பகிர்ந்து கொண்டு, உரையாட விரும்புகிறார். அவரிடம் நெருங்கி வருமாறு அவர் உன்னை அழைக்கிறார்… அவர் உன்னை இன்று கண்டுபிடிக்கட்டும். (வேதாகமம், மத்தேயு 11:28)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!