அவர் அழைக்கும் நபர் நீ தான்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவர் அழைக்கும் நபர் நீ தான்!

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ எனும் இந்த தியானத்தை வாசிக்கும் வாசகர்களிடமிருந்து, தினமும் நான் பெறும் அனைத்து மின்னஞ்சல்களாலும் நான் மிகவும் தொடப்பட்டேன். சில நேரங்களில், குறிப்பாக, “என் வாழ்க்கை மாறிவிட்டது, மறுரூபமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவர் எந்த நிபந்தனையுமின்றி என்னை நேசிக்கிறார் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது” என்று சொல்பவர்களின் சாட்சிகள் என்னை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்!

வேறு சில நேரங்களில், சில மின்னஞ்சல்களில் எழுதப்பட்டிருக்கும் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி நான் வாசிக்கும்போது, அது ​​உண்மையிலேயே என்னைக் கண்ணீர்விட்டு அழுது ஜெபிக்கத் தூண்டுகிறது.

இன்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்: நீ தைரியமானவன்/தைரியமானவள்; உனக்குத் தேவையான பலம் உன்னிடம் இருக்கிறது… கர்த்தர் அதை உனக்குள் வைத்திருக்கிறார். உனக்கு வளங்கள் இல்லாமல் இல்லை; உனக்கு சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை, ஏனென்றால், மனிதனால் கூடாதது தேவனால் கூடும். தேவன் உனக்குள் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார், தம்முடைய பிரசன்னத்தை வைத்திருக்கிறார், தம்முடைய ஜீவனை வைத்திருக்கிறார் மற்றும் தம்முடைய அன்பை வைத்திருக்கிறார்.

நீ இந்த மலையில் ஏறி, இந்த கொந்தளிக்கும் கடலின் வழியாக, மறுபுறத்திற்குக் கடந்து சென்று, குகை போன்ற இந்த சுரங்கப்பாதையை விட்டு வெளியேறி, வெளியே இருக்கும் வெளிச்சத்தைப் பார்க்கப் போகிறாய் என்று நான் முழு நிச்சயமாக நம்புகிறேன். சகோதரனே / சகோதரியே திடமனதாய் இரு! கர்த்தர் தமது முடிவைச் சொல்லிவிடவில்லை, மேலும் மனுஷனுடைய இயலாமைகள்தான் தேவன் செயல்படுவதற்கான வழிகள் என்பதை நீ மறந்துவிடாதே. நம் வாழ்க்கையின் விளிம்பில் நாம் இருக்கும்போது, ​​கர்த்தர் தம்முடைய கரம் நீட்டி உதவியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் அது இருக்கும், அது இக்கட்டு காலங்களில் நம்மை ஒருபோதும் கைவிடாது (சங்கீதம் 46:1).

ஆம், நீ பலமுள்ள ஒரு நபர்! ஆம், நீ திடமனதுடன் இருக்கிறாய், ஏனென்றால், கர்த்தர் அதை உனக்குள் வைத்திருக்கிறார். அது எனக்குத் தெரியும், நான் அதை விசுவாசிக்கிறேன். “பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்…” என்று கர்த்தர் ஒரு நாள் ஒரு மனுஷனிடம் சொன்னார் (வேதாகமத்தில் யோசுவா 1:6 இல் வாசிக்கவும்), இன்று, அவர் அதையே உனக்கும் சொல்கிறார்: “பலங்கொண்டு திடமனதாய் இரு, ஏனென்றால், நான் அழைப்பது உன்னைத்தான்.”

இப்போதே, நான் உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்… “ஆண்டவரே, நான் இந்த நபரை உம்மிடம் ஒப்படைக்கிறேன். உமது சமாதானம் இந்த நபரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும் என்றும், உமது பரிபூரண அன்பு இவரிடத்தில் உள்ள எல்லாப் பயத்தையும் போக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். இப்போதே, உமது பிள்ளையை உம்முடைய பலத்தாலும் தைரியத்தாலும் நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் அற்புதமான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!