அவர் அதை முழுமனதுடன் செய்தார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவர் அதை முழுமனதுடன் செய்தார்!

இன்று காலை வேளையில், எனக்குள் எழும்பிய ஒரு சிறிய எண்ணம் என்னைச் சிந்திக்க வைத்தது, அன்பினால் என்னைத் தட்டி எழுப்பி, என்னை ஊக்குவித்த அந்த எண்ணம் உன்னையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், இந்த நாள் முழுவதும் அது உன்னை வழிநடத்த வேண்டும் என்றும் நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

இயேசு தம்முடைய ஜீவனை மனமுவந்து கொடுத்தார். அவர் தம்முடைய ஜீவனைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. அதற்கு ஈடாக அவர் எதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர் அதை மனமுவந்து செய்தார். தம்முடைய முழு இருதயத்துடன் அதைச் செய்தார். தூய அன்பின் செயலாக அதைச் செய்தார்.

“…ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்… ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்…” என்று வேதாகமத்தில் இயேசு கூறுகிறார் (வேதாகமத்தில் யோவான் 10:15 மற்றும் 18ஐப் பார்க்கவும்)

நாம் மரிக்க வேண்டிய இடத்தில் நமக்குப் பதிலாக மரிக்க வேண்டிய அவசியம் இயேசுவுக்கு இல்லை. அவர் நம்மை அப்படியே விட்டுவிட்டிருக்கலாம்… ஆனால் உண்மை என்னவென்றால்… அவரால் நம்மை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அவர் தம்முடைய பிதாவையும் தம்முடைய கரத்தின் கிரியைகளான சிருஷ்டிகளையும் மிகவும் அதிகமாய் நேசித்தார், ஆகவேதான், அவர் நம்மை அப்படியே விட்டுவிடவில்லை. இதின் நிமித்தம், பிதாவின் மீது கொண்டிருந்த அன்பினாலும் நம் மீது வைத்திருந்த அன்பினாலும் இயேசு தம்முடைய ஜீவனையும், தம்முடைய முழு இருதயத்தையும் நமக்காகக் கொடுத்துவிட்டார்.

என் நண்பனே/தோழியே, இயேசு உன்னை நேசிக்கிறார். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார், ஆகவேதான் அவர் உனக்காகத் தம்முடைய ஜீவனையே கொடுத்திருக்கிறார். யாரும் அதை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளவில்லை, மாறாக, அவர் அதை உனக்காக முழுமனதோடு கொடுத்துவிட்டார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!