அவருடைய ஆவி உன்னில் வாசம் செய்கிறது 

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவருடைய ஆவி உன்னில் வாசம் செய்கிறது 

“இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.” (வேதாகமத்தில் தானியேல் 6:3ஐப் பார்க்கவும்)

நிறுவன வேலைகளை ஆற்றலுடன் செய்தல்… செலவுகளைத் திறம்பட நிர்வகித்தல்… நேரத்தை நிர்வகித்தல்… உங்கள் வீட்டை ஒழுங்கமைப்பது… என்று பல சவால்களை நாம் தினசரி சந்திக்கிறோம். சில நேரங்களில் அதிகமான நெருக்கடி கூட ஏற்படுகிறது. உனக்குள் மன அழுத்தம் அல்லது பயத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலைகளை நீ எதிர்கொண்டிருக்கலாம், இருப்பினும், கர்த்தர் அதை நன்கு அறிவார்.

இதிலிருந்து நாம் அடையக்கூடிய நன்மை இதோ… நிர்வகிப்பதற்கோ அல்லது சமாளிப்பதற்கோ கடினமான ஒரு சூழ்நிலையில் நீ தடுமாறிக்கொண்டிருப்பதால், ஆண்டவர் உன்னிடம் இருந்து அந்த பொறுப்புகளை அவர் கைகளில் எடுத்துக்கொள்ளலாம்! இந்த எல்லாக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவரால் உனக்கு உதவ முடியும், ஏனென்றால் அவருடைய ஆவி இந்த உலகத்தின் ஆவியை விட பல மடங்கு உயர்ந்தது. அவருடைய வழிகள் அற்புதமானவைகளும், மிகவும் சிறந்தவைகளும், அதிகமாக முன்னேற்றமடையச் செய்வதுமாய் இருக்கிறது.

மற்ற எல்லா யோசனைகளும் தோல்வியடையும்போது மட்டுமே நீ அவரிடம் வர வேண்டும் என்று நினைக்காமல்… முதலாவதாக நீ அவரிடம்தான் வர முயற்சிக்க வேண்டும்.

நீ அவருக்குச் சொந்தமான நபர். அவர் உன்னை நேசிக்கிறார். நீ வழிதப்பி வேறு வழியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், தம்மிடத்திற்கு நெருங்கிவர வேண்டும் என்பதற்காகவும் இந்த சூழ்நிலைகளை அவர் உன் வாழ்வில் அனுமதிக்கிறார்.

அவர் உன் தகப்பனாக இருக்கிறார் மற்றும் மறுக்க முடியாத அளவிலும் எந்தவித கேள்விக்கும் இடமில்லாத வகையிலும் நீ முற்றிலும் ஜெயம் பெற உனக்கு உதவ விரும்புகிறார். மிகவும் அறிவார்ந்ததும் ஆக்கப்பூர்வமானதுமான யோசனைகள் ஒரே ஒரு ஆதாரத்திலிருந்து, ஒரே ஒரு இடத்திலிருந்துதான் வருகிறது… அதாவது, பிதாவின் இருதயத்திலிருந்து, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரின் ஆவியிலிருந்து வருகிறது!
தம்முடைய ஞானத்தை அவர் உனக்குக் கொடுக்கிறார். அவரிடம் ஞானத்தைப் கேள். அவரிடத்தில் சென்று ஆலோசனைகளைப் பெற்றுக்கொள். அவர் உனக்கு பதில் அளிப்பார். தேவன் உன்னை மிகவும் நேசிப்பதால் நீ வெற்றிபெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கவும்: “பிதாவே, உமது ஞானமும், உமது யோசனைகளும், உமது படைப்பாற்றலும் மற்றும் உமது பரிசுத்த ஆவியும் எனக்கு வேண்டும் என்று நான் உம்மிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் அவற்றைப் பெற்றுக்கொள்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!