அவருடைய அன்பு பரிபூரணமானது

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவருடைய அன்பு பரிபூரணமானது

“மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 54:10)

என் அன்பரே, ஆண்டவர் உன் மீது வைத்திருக்கும் அன்பு பரிபூரணமானது. அதாவது இதை இன்னும் சிறப்பாக்க அல்லது இனிமையாக்க எதையும் சேர்க்க முடியாது, என்று அர்த்தம். இந்த அன்பு உன் இதயத்தின் ஏக்கங்களை முழுமையாக பூர்த்தி செய்கிறது!

  • இந்த அன்பு, வறண்ட நிலத்தில் கொட்டும் கனமான மழையைப் போன்றது.
  • இந்த அன்பு, கோடையின் வெப்பத்தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும், மெல்லிய காற்றைப் போன்றது.
  • அவர் உன் மீது வைத்திருக்கும் இந்த அன்பு மிகவும் கடுமையான குளிர்காலத்தின் மத்தியில் பற்றியெரியும் ஒரு சுடரைப் போன்றது.

ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்.

உன்னிப்பாகக் கேள்… பார்… ஆண்டவரின் அன்பு உன்னைச் சுற்றிலும் எங்கும் உள்ளது, உனக்குள்ளும் உள்ளது. ஒவ்வொரு நாள் காலையிலும், அவர் உனக்கு ஒரு அன்பின் கடிதத்தை எழுதுகிறார். உன் இதயத்தின் மண்ணை ஒளிரச் செய்வதற்கும் கதகதப்பாக்குவதற்கும் சூரிய ஒளியின் முதல் கதிர்களையும் அனைத்தையும் அவர் கைப்பற்றுகிறார்.

இந்த அன்பைப் பெற நான் உன்னை அழைக்கிறேன், நீ இருக்கின்றவாறே ஆண்டவர் உன்னை நேசிக்கிறார் என்பதை விசுவசிக்க அழைக்கிறேன்! இந்த அன்பு எல்லையற்றது என்று விசுவசி. இந்த வல்லமையான உண்மையை நீ புரிந்து கொள்வதால், தெய்வீக அன்பு உன் சங்கிலிகளை உடைத்து, உன் கண்ணீரை உலர்த்தி, உன் இதயத்தையும் குணப்படுத்துகிறது.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!