அவருடைய அன்பு உனக்கு எப்போதும் உண்டு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவருடைய அன்பு உனக்கு எப்போதும் உண்டு!

உன்னுடைய முதல் முதலான காதலின் துடிப்பு உனக்கு நினைவிருக்கிறதா? அது ஒரு அக்கினித் தழலைப்போலவும், தன் வழியில் வரும் எதுவாக இருந்தாலும் அதை வெப்பமடைய செய்வதாகவும் இருந்தது. உன் பாதையைப் பிரகாசிக்கச் செய்து, உனக்கு வழிகாட்டும் ஒரு ஒளியாக அது இருந்தது. உன்னால் அடக்க முடியாத ஒரு விசையாக இருந்து, நம்பமுடியாத தியாகங்களைச் செய்ய உன்னை தள்ளியது…

மனிதனை செயல்படச் செய்யும் வல்லமை வாய்ந்த உந்துதல்களில் ஒன்று அன்பாகும். அன்பினால், நாம் மலைகளை நகர்த்துவோம், பல மைல்கள் ஓடுவோம், பல மணிநேர தூக்கத்தை தியாகம் செய்வோம், இன்னும் பல விஷயங்களைச் செய்வோம்… ஆனாலும், நீயும் என்னைப் போன்ற மனிதன்/மனுஷிதான், உன் அன்பு ஒரு நாள் அதிகமாகவும் அடுத்த நாள் குறைவாகவும் இருக்கக் கூடும்.

தேவனுடைய அன்பு நம்முடையதிலிருந்து வேறுபட்டது. இது பரிபூரணமானது, மாறாதது, நிபந்தனையற்றது, எல்லையில்லாதது மற்றும் நித்தியமானது. இந்த அன்பு ஒரு உணர்ச்சி வசப்படுதலாக இருக்காது, அது மேலான ஒன்றாகும் – இது ஒரு ஆதரவும், பலமும், மற்றும் நம்முடன் சேர்ந்து, நம்மைப் பலப்படுத்தி, நம்மை உயர்த்துகிற வல்லமையுமாக இருக்கிறது.

  • இந்த அன்பிலிருந்து உன்னை எதுவும் பிரிக்க முடியாது (வேதத்தில் ரோமர் 8:39ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு முந்தி உன்னை நேசித்தது (வேதத்தில் 1 யோவான் 4:19ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு உன் கடன்களைத் தீர்க்கிறது (வேதாகமத்தில் 1 யோவான் 4:10ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு நித்தியமானது (வேதாகமத்தில் எரேமியா 31:3ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு உனக்காகத் தம்முடைய ஜீவனையே கொடுத்தது (வேதாகமத்தில் யோவான் 15:13ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு உன் பயத்தை விரட்டுகிறது (வேதாகமத்தில் 1 யோவான் 4:18ஐப் பார்க்கவும்)
  • இந்த அன்பு ஒரு ஆள்தத்துவமுள்ள நபராய் இருக்கிறது (வேதாகமத்தில் 1 யோவான் 4:16ஐப் பார்க்கவும்)

ஒவ்வொரு நாளும், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று தேவன் உன்னைப் பார்த்துச் சொல்லுகிறார். அவர் ஒவ்வொரு வசந்த காலத்திலும் பூக்களையும், ஒவ்வொரு மாலை வேளையிலும் ஒரு அற்புதமான சூரிய அஸ்தமன ஓவியத்தையும் உனக்கு வழங்குகிறார். அவர் உன்னை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார் மற்றும் உனக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் உனக்கு உதவுவார். இன்று, இந்த அன்பு இன்னும் உன் அருகில் நெருங்கி வந்து, உன்னைச் சூழ்ந்துகொண்டு, உனக்கு உதவுகிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்னை நேசிக்கிறார்…

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!