அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை உனக்கு சாத்தியமே!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை உனக்கு சாத்தியமே!

வேதாகமத்தில், இயேசு வானத்தையும் பூமியையும் இணைக்கிற ஏணி என்று தம்மைத்தாமே அழைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?

சற்றே ஆச்சரியமான இந்தப் படத்தை விளக்க எனக்கு இடமளி. “… வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்ற இந்த ஆச்சரியமான வாக்கியத்தை இயேசு கூறியுள்ளார். (வேதாகமத்தில் யோவான் 1:51ஐ வாசித்துப் பார்க்கவும்)

பழைய ஏற்பாட்டிலிருந்து யாக்கோபின் ஏணியை இயேசு தெளிவாகக் குறிப்பிடுகிறார். யாக்கோபுக்கு ஒரு கனவு வந்தது. அவர் பூமியில் ஒரு ஏணி அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார், அதன் மேற்பகுதி வானத்தை தொட்டுக்கொண்டிருந்தது. தேவதூதர்கள் இந்த ஏணியில் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர், அதற்கு மேல் கர்த்தர் நின்றுகொண்டிருந்தார். (வேதாகமத்தில் ஆதியாகமம் 28ம் அதிகாரத்தை வாசிக்கவும்)

இங்கே இயேசு இந்த தரிசனத்தை மீண்டும் தொடங்கி, … “இப்போது,​ நான் தான் வானத்திற்கும் பூமிக்கும் இடையேயான ஏணியாக இருக்கிறேன்! தெய்வீக செயல்பாடுகள் என் வழியாகக் கடந்துசெல்லும். தேவதூதர்கள் என் வாழ்வின் மூலமாக ஏறவும் இறங்கவும் போகிறார்கள்” என்று அறிவிக்கிறார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகுதான், இயேசுவின் தாயாகிய மரியாள் தலையிட்டு அவரிடம் கேட்டுக்கொண்டதின் நிமித்தம், அவர் தமது முதல் அற்புதத்தைச் செய்கிறார்‌. அவர் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றுகிறார். அற்புதங்கள் மற்றும் குணமடைதல் நிறைந்த வாழ்க்கை இவ்வாறு தொடங்கியது… அது இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது!

இதுபோன்ற அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை உனக்கும் கிடைக்கும். இயேசுவையே பிரதிநிதித்துவப்படுத்தும் தெய்வீக இடைப்படுதலின் ஏணியானது உன்னிடத்தில் வருகிறது. இயேசுவே இந்த ஏணி ஆவார். அவர் உன் சூழ்நிலையில் பரலோகத்தை இறங்கிவரச் செய்கிறார். உன் வாழ்க்கையில் பரலோகம் இயேசுவின் மூலம் பூமியைத் தொடுகிறது!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ஒரு செவிலியர், ஒரு செவிலியராகவும் இயேசுவைப் பின்பற்றுகிற ஒரு நபராகவும் நான் என் உள்ளத்தில் இருக்கும் எல்லாவற்றையும் ஊற்றிவிட்ட பின்பு, சில சமயங்களில் நான் வெறுமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். நான் என் வேதாகமத்தை வாசிக்கிறேன், பிதா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவியானவருடன் பேசுவதற்கு நான் நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் என்னுடன் பேசுவதற்கு தேவன் உங்களை பயன்படுத்தியிருக்கிறார், உங்களுக்கு என்னைப் பற்றியும் நான் எப்படிப்பட்ட சூழ்நிலையைக் கடந்துசென்றுகொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றியும் எதுவுமே தெரியாதபோதிலும், தேவன் என்னுடன் பேசிய வசனங்கள் அடிக்கடி உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. என் நண்பரே, உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களையும் உங்கள் குழுவையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.” (அமிர்தா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!