அன்புதான் வெற்றியின் இறுதி அளவுகோல்

முகப்பு ›› அற்புதங்கள் ›› அன்புதான் வெற்றியின் இறுதி அளவுகோல்

“நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பதன் மூலம் நீங்கள் அவருடைய சீஷர்கள் என்பதை உலகம் அறியும் என்று இயேசு சொன்னார்.” (வேதாகமத்தில், யோவான் 13:35 ஐப் பார்க்கவும்)

நாம் வாழும் சமூகமானது, ஜனங்கள் மற்றும் அவர்களின் சூழ்நிலைகளின் வெற்றியை, அவர்களது செயல்திறன் மற்றும் சாமர்த்தியத்தை வைத்து அளவிடுகிறது.

கர்த்தர் நமக்கு வெவ்வேறு அளவுகோல்களை வழங்குகிறார் என்று நான் நம்புகிறேன். அவைகளை:

  1. உறவுகளின் தரத்தின் அளவுகோல்.
  2. மற்றவர்களிடம் நாம் செலுத்தும் அன்பின் அளவுகோல்.
  3. நமது குடும்பங்கள், நமது நண்பர்கள் ஆகியோர் மீது நாம் செலுத்தும் அக்கறையும் கவனமுமாகிய அளவுகோல்.

என்று நாம் வகைப்படுத்தலாம்.

நமது தேவன் உறவுகளின் தேவனாய் இருக்கிறார். இதை ஒரு கணம் சிந்தித்துப் பார்… அவர் மனுக்குலத்தை உருவாக்கியபோது, ஒரே மனுஷனையும் ஒரே மனுஷியையும் சிருஷ்டித்தார். அவரிடத்தில் அபரிவிதமான வல்லமை இருந்ததால், ஒரு வார்த்தையில் பல தேசங்களை உடனடியாக அவரால் உருவாக்கியிருக்க முடியும்! அவர் ஏன் செய்யவில்லை? மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தேவன் தமது படைப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று சொன்னார், அதற்கு, அது முழுமையானதாக இருந்தது என்றும், சகலமும் நேர்த்தியானதாக இருந்தது என்றும் அர்த்தமாகும்.

இயேசு உன்னை விசேஷித்த விதத்திலும், தனிப்பட்ட முறையிலும் நேசிக்கிறார். அவர் உன்னைக் கூட்டத்தில் தொலைந்துபோன நபராகப் பார்க்கவில்லை; மாறாக, அவருடைய பார்வையானது, உன்னைத் தனித்துவமுள்ள ஒருவராகவும், உனக்குள் இருக்கும் தனிச்சிறப்புகள் அனைத்தையும் காண்கிறது. இயேசுவை உன் முன்மாதிரியாக நிறுத்துவதற்கும் — அவரைப்போலவே நேசிக்கவும், செயல்படவும், பேசவும் தேவன் உன்னை அழைக்கிறார்.

என்னுடன் சேர்ந்து ஜெபி: “இயேசுவே, உலகம் நேசிக்கிற பிரகாரமாக நீர் என்னை நேசிக்காததற்கு நன்றி. எனது வெற்றியை எனது செயல்திறனாலோ அல்லது திறமையினாலோ அளவிடாமல், எனது உறவுகளின் தரம் மற்றும் நான் எப்படி நேசிக்கிறேன் என்பதன் அடிப்படையில் அளவிடுவதற்காக நன்றி. நீர் ஒரு மிகப்பெரிய தேவன்! நீர் விரும்புகிறபடி நான் நேசிக்க எனக்கு உதவுவீராக. முக்கியமான சகல காரியத்திற்கும் நீரே எனக்கு முன்மாதிரியாக இருக்கிறீர். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!