அனுதினமும்… ஒரு அதிசயத்தை அனுபவி!
முகப்பு ›› அற்புதங்கள் ››
அதிசயங்கள் என்பவை கிறிஸ்துவிலிருந்தும், அவருடைய பூலோக ஊழியத்திலிருந்தும் பிரிக்க முடியாத ஒன்றாகும். வேதம் நமக்குச் சொல்கிறது, “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.” (வேதாகமத்தில் யோவான் 21:25ஐப் பார்க்கவும்)
இயேசு தமது மூன்று வருட ஊழியத்தில் அநேக அற்புதங்களைச் செய்தார்: குருடர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள், செவிடர், ஊமையர், மற்றும் பிசாசு பிடித்தவர்களை அவர் குணப்படுத்தினார். அதோடு கூட தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றுதல், வலைநிறைய மீன்களைப் பிடிக்கச்செய்தல், புயலை அமைதிப்படுத்துதல், அப்பத்தையும் மீனையும் பெருகச் செய்தல் போன்ற… இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களையும் அடையாளங்களையும் அவர் செய்தார்.
இந்த அதிசயங்கள் மூலமாக, இயேசு தம்முடைய ஜனங்கள் மீது இரக்கமாய் இருக்கவும், மனுஷனுடைய தேவைகளுக்கு பதிலளிக்கவும் விரும்பினார். அவர் ஒருபோதும் தமது சொந்த மகிமைக்காக எதையும் செய்யவில்லை, மாறாக எப்போதும் அவரோடு கூட இருந்த அவரது பிதாவின் மகிமைக்காகவே அவற்றை செய்தார். பிதாவின் நாமத்திலும், அவர் மூலமாகவும் இயேசு இந்த அதிசயங்களைச் செய்தார் (வேதாகமத்தில் யோவான் 11:41ஐப் பார்க்கவும்).
இன்று, இயேசு உன்னில் வாழ்கிறார்! எதற்காக வாழ்கிறார் என்று உனக்குத் தெரியுமா? அதிசயம் உனக்குள்ளும் உன் மூலமாகவும் வெளிப்படுவதற்காக. நீ இந்த உலகிற்குக் கொண்டுவரும் சமாதானமும் சந்தோஷமுமே ஒரு அதிசயமாகும்!
தேவனுடைய அதிசயத்தை நீ அனுதினமும் அனுபவிக்க வேண்டும் என்பதே உனக்கான என் ஜெபமாகும்!
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்: “எரிக் அவர்களே, ஆம் புதன் கிழமை அன்று நான் ஒரு அதிசயத்தைப் பெற்றேன். மூன்று வருடங்களுக்கு முன்பு என் கழுத்து நரம்புகளில் இருந்த கரோடிட் கட்டி ஒன்றை அகற்றும்படி எனக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது… அது மிகவும் சிக்கலானதாக இருந்தது, ஆனால் தேவன் அந்த அறுவை சிகிச்சையைக்கூட சிக்கலின்றி நடைபெறச் செய்தார்…அவர் தொடர்ந்து என்னைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் உங்கள் வலைதளத்தைப் பார்த்தேன்… உங்கள் ஜெபத்திற்காகவும் உங்கள் வலைதளத்திற்காகவும் நன்றி! தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! நான் இன்னும் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருக்கிறேன், ஆனாலும் மற்றவர்கள் என் சாட்சியைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்!” (விஜயா)