அசாதாரணமான தெய்வீக மண்டலத்திற்குள் பிரவேசி

முகப்பு ›› அற்புதங்கள் ›› அசாதாரணமான தெய்வீக மண்டலத்திற்குள் பிரவேசி

ஆண்டவரிடமிருந்து வந்ததாக நீ உணரும் அளவுக்கு உன் இருதயத்தின் உள்ளே கொழுந்துவிட்டு எரியும் கனவு உனக்கு இருக்கிறதா?

இந்தக் கனவு மிகவும் பெரியதாகத் தோன்றுகிறது, ஆகவே… இது எனக்கானது அல்ல, நான் மிகவும் சிறியவன்/சிறியவள் மற்றும் அனுபவமற்றவன்/அனுபவமற்றவள், வேறு ஒருவர் என்னைவிட அதிக வரம்பெற்றவராய் இருப்பார் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய்.

ஆனாலும்… உனக்காக ஆண்டவர் கொண்டிருக்கும் கனவுகள் நீ கற்பனை செய்வதை விட எப்போதும் பெரியவை!

அசாதாரணமான காரியங்களைச் செய்ய சாதாரண ஜனங்களைப் பயன்படுத்துவது தேவனுக்கு மிகவும் பிரியமாய் இருக்கிறது. உன் வாழ்க்கையில் ஆண்டவர் தம்மை மகிமைப்படுத்தப் போகிறார் என்று நான் நம்புகிறேன்!

நீ தயவு மற்றும் அற்புதங்களைப் பெற்று வாழ்வதற்காக, அசாதாரணமான தெய்வீக முத்திரையால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறாய்.

தேவனால் எதையும் மாற்ற முடியும்: உன் வேலை, உன் சூழ்நிலைகள், உன் திருமணம், உன் குழந்தைகள், உன் பொருளாதாரம்… எதிர்காலத்தை அவருடைய பார்வையில், அவர் பார்ப்பதைத் போன்று பார்க்கத் தொடங்கு!

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “ஆண்டவரே, என் வாழ்க்கைக்காக நீர் கொண்டிருக்கும் அசாதாரணமான கனவுகளுக்கு நன்றி!! நான் தயவு மற்றும் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்காகப் பிறந்தேன் என்பதை நினைவூட்டியதற்கு நன்றி. எனது எதிர்காலத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! உமது வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!