You are a miracle!

அனுதினமும் ஒரு அதிசயத்திற்கு நீங்கள் பதிவுசெய்து ஐந்து நாட்கள் ஆகின்றது. இந்த தினசரி மின்னஞ்சல்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறதென்று  நம்புகிறேன்!

 

எனது மின்னஞ்சல்களை நான் எப்போதும் "நீங்கள் ஒரு அற்புதம்" அல்லது "நீங்கள் இருப்பதற்கு நன்றி" என்ற வழக்கத்திற்கு மாறான வெளிப்பாட்டுடன் முடிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். 

 

நான் ஏன் இதை தினமும் சொல்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இது ஒரு நல்ல கேள்வி! 

 

நீங்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதை நான் தினமும் சொல்கிறேன். தாம் விசேஷித்தவர் என்பதை நம்பாத பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டவரின் சார்பாக நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் விசேஷித்தவர்! நீங்கள் ஒரு அற்புதம்! 

 

நான் இந்த வாக்கியத்தை விரும்புவதற்கான வேறு சில காரணங்கள் …

 

  • இதை சொல்லும்போது, கேட்பவருக்கு இது மதிப்பும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது என்று நான் நினைக்கிறன். "நீங்கள் ஒரு அற்புதம். நீங்கள் முக்கியமானவர், நீங்கள் விலைமதிப்பற்றவர், நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் இங்கே இருப்பது மிகவும் விசேஷமானது. நீங்கள் இருப்பதற்கு நன்றி! நான் உங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்."

 

  • இது ஆண்டவரை மகிமைபடுத்துகிறது. அவர் ஒருவரால் மட்டுமே அற்புதங்களைச் செய்ய முடியும். நீங்கள் இருக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்பியதால்தான் நீங்கள் இருக்கிறீர்கள்! உங்கள் வாழ்க்கைக்கு அவர் ஒரு திட்டம் வைத்துள்ளார். நீங்கள் உயிர்வாழ்வதற்கான... ஆதாரம்!

 

  • இறுதியாக, நம்மை படைத்தவருக்கான ஒரு அர்ப்பணம்! அவரிடம்தான் நாம் நன்றியுணர்வோடு சொல்கிறோம் "என் வாழ்க்கைக்காக நன்றி, பிறருக்காக நன்றி, உம்முடைய அற்புதங்களுக்காக நன்றி!" என்று.

 

எனவே அன்பரே, ஒருபோதும் மறவாதீர்: நீங்கள் ஒரு அற்புதம்! நீங்கள் இருப்பதற்கு நன்றி!