இன்று என்ன நாள் என்பது உனக்கு தெரியுமா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று வாரத்தின் எந்த நாள் என்று உனக்குத் தெரியுமா? கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின நாட்கள் மற்றும் பிந்தின நாட்களின் கிழமையை என்னால் சரியாகச் சொல்ல முடிவதில்லை, ஏனென்றால் ஒவ்வொரு நாட்களும் வாரத்தின் இறுதி நாட்களைப் போலவே எனக்குத் தெரிகிறது, உனக்கும் அப்படித்தானே?
இயேசுவும் கிழமையை தவறவிட்டிருக்கலாம், ஆனால் வேறு ஒரு காரணத்திற்காக அவர் அப்படிச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் 40 நாட்கள் பகல் மற்றும் 40 இரவு நேரங்களை வனாந்தரத்தில் கழித்தார், பிசாசினால் சோதிக்கப்பட்டார் (மத்தேயு 4:1) மேலும் மத்தேயு 4:2ல் “அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று” என்று சொல்லப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டும்தானா, அல்லது வேதாகமத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளதா? 😉
இயேசு பட்டினியாகவும், தனிமையாகவும், சோர்வாகவும் இருந்திருக்கலாம். ஆனால் அவரது மிகப்பெரிய சோதனை இதற்குப் பிறகுதான் உள்ளது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்: அவர் சிலுவையில் அறையப்படுதலே அந்த சோதனையாகும்.
“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று இயேசு ஜெபித்தார் (லூக்கா 22:42).
“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” என்று சொல்லப்பட்டுள்ள மேன்மையை அடைய விரும்பினாலும், இயேசு அதற்கு முன் தாம் நிறைவேற்ற வேண்டியிருந்த பலியை நிறைவேற்றாமல் கடந்துசெல்ல விரும்பி இருக்கலாம். (பிலிப்பியர் 2:9-11).
சில நேரங்களில் நீ வாழ்க்கையின் கடினமான பகுதிகளைத் தவிர்த்துவிட்டு சந்தோஷத்தை உண்டாக்கும் பலன்களை விரைவாகப் பெற விரும்புகிறாயா?
அது வனாந்தரத்தில் இயேசுவை சோதித்த பிசாசின் சோதனையேயன்றி வேறல்ல. “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று பிசாசு சொன்னான். “சோதனையை விட்டுவிட்டு சந்தோஷம் உண்டாக்கும் பலனை நோக்கி கடந்து செல்” என்ற ஒரு குறுக்குவழியை அவன் இயேசுவுக்கு முன்வைத்தான்.
இயேசு, சோதனை மற்றும் வெற்றிக்கு இடைப்பட்ட காலத்தில் தாம் இருப்பதை உணர்ந்தார், ஆனால் அவருடைய தியாகம் இல்லாமல், பாவமன்னிப்பு இருக்காது என்பதையும், மரணத்தின் மீதான ஜெயம் மற்றும் நித்திய ஜீவனின் வரம் போன்ற எதுவும் இருக்காது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
சோதனை இல்லாமல், ஜெயம் பெற முடியாது.
சிலுவையில் இயேசு செய்த தியாகத்தை நினைக்க சிறிது நேரம் ஒதுக்கி, இன்று நீ எதிர்கொள்ளும் சோதனைகளை மேற்கொள்ள அவரை உன் வாழ்வில் அழைப்பாயாக.