உன் கிறிஸ்துமஸை நீ எப்படிக் கொண்டாடினாய்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் கிறிஸ்துமஸை நீ எப்படிக் கொண்டாடினாய்? அது சந்தோஷம், புன்னகை மற்றும் அன்புக்குரியவர்களால் நிறைந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தது என்று நான் நம்புகிறேன். ஆனால் உனக்கு அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அதை நீ என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் 😊.
இப்போது கிறிஸ்துமஸ் முடிந்துவிட்டது, நாம் ஒரு “இடைப்பட்ட” காலகட்டத்தில் இருக்கிறோம் – கிறிஸ்துமஸின் அனைத்து உற்சாகங்களும் முடிந்துவிட்டன, ஆனால் புத்தாண்டு விரைவில் வரவிருப்பதால் நம் அன்றாட வாழ்வுக்கு நாம் முழுமையாகத் திரும்பிவிடவில்லை. இது ஒரு இக்கட்டான சூழல், இல்லையா? 🤔
சில சமயங்களில், நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது – “இடைப்பட்ட நேரத்தில்” நாம் சிக்கிக்கொள்கிறோம். எனவே இந்த நாட்களில், தங்கள் வாழ்வு “இடைப்பட்ட நேரத்தில்” இருப்பதை உணர்ந்துகொண்ட நான்கு நபர்களை வேதாகமத்திலிருந்து நாம் ஆராய்ந்து பார்ப்பதை விட சிறந்தது வேறு என்ன இருக்க முடியும் என்று நான் உணர்ந்தேன்.
மத்தேயு 28ம் அத்தியாயத்தில் உள்ள சம்பவத்தை எடுத்துக்கொள், இரண்டு ஸ்திரீகள் இயேசுவின் கல்லறைக்குச் சென்று, ஒரு தேவதூதனைச் சந்தித்தபோது,“தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்” என்றான். (மத்தேயு 28:5-6)
“அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.” – (மத்தேயு 28:8)
இயேசுவோடு வாழும் வாழ்க்கையில் உனக்குப் பயம் காணப்பட்டாலும், அது உனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். இது உற்சாகமளிப்பதாகவும், அதிக தீவிரமானதாகவும் இருக்கலாம். இயேசுவைப் பின்தொடர்வது பெலவீனமானவர்களுக்கானது அல்ல. மத்தேயு 16:24-25ல் இயேசு இவ்வாறு கூறுகிறார்:
“அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.”
இது ஒரு பெரிய கோரிக்கை!
இயேசுவின் கல்லறையில் இருந்த ஸ்திரீகளைப்போல், சில சமயங்களில் இயேசுவோடு நடப்பது கடினமானதாகவோ அல்லது பயத்தைத் தூண்டுவதாகவோ நீ உணர்ந்தால், அவர்கள் செய்ததைப் போலவே செய்ய உன்னை நான் ஊக்குவிக்கிறேன்: இயேசுவை விட்டு விலகி ஓடிவிடாமல் அவரை நோக்கி நீ ஓடுவாயாக!
இயேசு அவர்களை அங்கே சந்திப்பதாக தேவதூதன் சொன்னதால் ஸ்திரீகள் கலிலேயாவிற்கு விரைந்து சென்றனர் (மத்தேயு 28:7-8). அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு திடீரென்று அவர்களைச் சந்தித்தார் (மத்தேயு 28:9)
உன் இதயத்தில் பயம் இருந்தாலும் பரவாயில்லை, இயேசு உன்னையும் சந்திக்க விரும்புகிறார்!
![unnamed (7) unnamed (7)](https://tamil.jesus.net/wp-content/uploads/2022/03/unnamed-7.png)