கிறிஸ்துமஸின் இருண்ட பக்கம்
முகப்பு ›› அற்புதங்கள் ››
கிறிஸ்துமஸ் தினம் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நீ உற்சாகமாக இருக்கிறாயா அல்லது நீ எதிர்பார்க்காத ஏதோ ஒரு காரியம் உனக்கு வருத்தத்தைக் கொண்டுவருகிறதா?
கிறிஸ்துமஸ் ஒரு பண்டிகை காலமாக இருந்தாலும், பெரும்பாலும் அது கசப்புகலந்த உணர்வுகளையும் உனக்குள் எழச்செய்யலாம். நீ இந்தக் காலகட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்திருக்கலாம், அதே நேரத்தில் நீ நினைத்தபடி நடக்காமல் போய்விடுமோ என்ற பயமும் உனக்குள் வரலாம்.
கிறிஸ்துமஸ் நாட்களில், குடும்பத்தைக் குறித்த அக்கறை பதட்டங்களாக மீண்டும் தலைதூக்குகின்றன, நாம் நினைத்தது நடக்காதபோது, இழப்பை அதிகமாக உணர்வோம், மேலும் அன்புக்குரியவர்கள் நம்முடன் அந்த நாளில் இல்லாதது நம்மை மிகவும் வருத்தமடையச் செய்யும். கிறிஸ்துமஸ் கூடுகைகளின் காலகட்டமாக இருந்தாலும், அது அதிக அளவில் தனிமையை உணர வைக்கக் கூடும் – குறிப்பாக, கிறிஸ்துமஸை சேர்ந்து கொண்டாடுவதற்கு ஒரு குடும்பம் இல்லாதவர்கள் நம் மத்தியில் இருந்தால், அது அவர்களுக்குத் தனிமையை உணர வைக்கும்.
வெளியில் இருந்து பார்த்தால், நீ இந்தப் பண்டிகை காலத்தை ரசிப்பதுபோலவும், பண்டிகை கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உன்னை அமைதிப்படுத்தி, ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுவதுபோலவும் உணரலாம். இதே சூழல் உனக்கும் இருக்குமானால், யோவான் ஸ்நானகனின் சம்பவத்தை வாசித்து ஊக்கமடைவாயாக:
“தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (யோவான் 1:6-9)
யோவானின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, ஆனால் அவர் தான் ஆற்ற வேண்டிய பங்கை நன்கு அறிந்திருந்தார்: ஒளிக்கு (= இயேசு) சாட்சி கொடுக்க வந்த நபராக இருந்தார். தான் ஒளியல்ல என்பதை யோவானும் அறிந்திருந்தார். அவர் உட்பட அனைவருக்கும் ஒளி தேவை என்பதை அவர் அறிந்திருந்தார்.
இந்தக் காலகட்டத்தில், கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்விலும் பிரகாசிக்க வேண்டும், குறிப்பாக அச்சம், தனிமை, துக்கம் மற்றும் வேதனை எனும் இருண்ட இடங்களில் ஒளி பிரகாசிக்க வேண்டும்.
உன் உண்மையான உணர்வுகளை இயேசுவிடம் பகிர்ந்துகொள்ள இன்றே சற்று நேரம் ஒதுக்கு. நீ பயப்படுகிறாயா, பரிதாப நிலையில் இருக்கிறாயா, புண்படுத்தப்பட்டு இருக்கிறாயா அல்லது கோபப்படுகிறாயா? அதை அவருடன் பகிர்ந்துகொள், உன் இதயத்தின் அந்த இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசிப்பிக்கும்படி நீ ஆண்டவரிடத்தில் கேள்.
இந்த வசனத்தை அறிக்கை செய்து, இந்த தியானத்தை நிறைவுசெய்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1)
![unnamed (7) unnamed (7)](https://tamil.jesus.net/wp-content/uploads/2022/03/unnamed-7.png)