ஆண்டவருடைய தாளத்திற்கேற்ப வாழு!
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் எல்லா முயற்சிகளையும் தாண்டி, நீ விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்பதால் தொடர் மனஅழுத்தத்தில் வாழ்கிறாயா? ஒருவேளை, மன அழுத்தம், சோர்வு, மனச்சோர்வு, கவலை, விரக்தி போன்ற இந்த வார்த்தைகள் உனக்குப் பொருத்தமானதாக தோன்றலாம்.
நாம் யார் என்பதை நாம் சந்திக்கும் சூழல் வரையறுக்க அனுமதிப்பது மிகவும் எளிதானது!
இந்த வார்த்தைகளை நாம் மெதுவாக சேர்ந்து வாசிப்போம்: “நீ சோர்வாக இருக்கிறாயா? களைத்துப்போய்விட்டாயா? மதத்தின் மீதான பற்று அணைந்துபோய்விட்டதா? என்னிடம் வா. எனக்கு அருகில் வரும்படி உன் சூழலைவிட்டு விலகு, உன் வாழ்க்கையை மீட்டுக்கொள்வாய். உண்மையாக ஓய்வு எடுப்பது எப்படி என்பதை நான் உனக்குக் காண்பிப்பேன். என்னோடு சேர்ந்து நடந்து, என்னோடு சேர்ந்து வேலை செய் – நான் அதை எப்படி செய்கிறேன் என்று பார். கிருபை எனும் கட்டாயப்படுத்தப்படாத தாளங்களைக் கற்றுக்கொள். நான் உன் மீது கனமான ஒன்றையோ அல்லது உனக்குப் பொருத்தமில்லாத ஒன்றையோ வைக்கமாட்டேன். என்னுடன் நட்பு வைத்துக்கொள், நீ சுதந்திரமாகவும் சுலபமாகவும் வாழக் கற்றுக்கொள்வாய்.” (மத்தேயு 11:28-30)
நீ அதிக பாரத்தை சுமந்துகொண்டிருந்தாலோ அல்லது “உனக்கு ஏற்றதல்லாத” ஒரு நாளாக அது இருந்தாலோ, அவர் உனக்காகத் திட்டமிட்டதை நீ தேர்ந்தெடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று இயேசு கூறுகிறார். அவர் உன் மீது பாரமான அல்லது உனக்கு ஏற்றதல்லாத எதையும் வைக்கமாட்டார்! அவருடைய கிருபை எனும் கட்டாயப்படுத்தப்படாத தாளங்களுக்கு ஏற்ப இயேசு உன்னைத் நடத்தட்டும். நீ அவருடைய கரத்தைப் பிடித்து அவருடன் சேர்ந்து வேலை செய்யும்போது, அவருடைய கிருபைக்கு முன்னால், எந்த மனஅழுத்தமும் உனக்கு இருக்காது. கிறிஸ்துவில் இளைப்பாறுதல் என்பது உன் முழு நம்பிக்கையையும் அவர் மீது வைப்பதாகும்.
நான் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்ட நபர் என்பதை உணரும்போது, எந்த மன அழுத்தத்தையும், எந்த சோர்வையும், எந்த விரக்தியையும், என்னை வரையறுக்க விடமாட்டேன். உன் இதயத்தில் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டால், அவர் உனக்குச் சொல்வதையும் நீ கேட்பாய்: “என்னில் இளைப்பாறு. நான் உன்னை மீட்டெடுக்க விரும்புகிறேன். உண்மையாக இளைப்பாறுதலை அனுபவி. என்னோடு சேர்ந்து நடந்து என்னோடு சேர்ந்து வேலை செய்… கிருபை எனும் கட்டாயப்படுத்தப்படாத தாளங்களைக் கற்றுக்கொள்.”
இன்று பலத்துடனும் நம்பிக்கையுடனும் அறிக்கையிடு. “கர்த்தராகிய இயேசுவே, நான் எல்லாவித மனஅழுத்தங்களையும் எல்லாவித ஒடுக்குமுறைகளையும் புறக்கணிக்கிறேன். நான் சுமந்து செல்லும்படி, நீர் அதிக எடையுள்ள எதையும் என் மீது வைக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். உமது சுமை இலகுவானது. உமது நுகம் சுமப்பதற்கு எளிதானது. நான் உம்மோடு சேர்ந்து நடந்து வேலை செய்கிறேன். நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை நான் அறிவேன், மேலும் உமது கிருபை எனும் கட்டாயப்படுத்தப்படாத தாளங்களை நான் கற்றுக்கொள்கிறேன். ஆமென்.”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் ஊழியத்தின் மூலமாக நான் பெற்றுக்கொள்ளும் மின்னஞ்சல் செய்திகளுக்கு மிக்க நன்றி! என் வாழ்க்கையில் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் இருப்பதை நான் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதமாகவும் எண்ணுகிறேன். உங்களுடைய ஊக்கமளிக்கும் செய்திகள் எனது இருண்ட நேரங்களில் ஒளியாகவும், நான் சோர்வாக இருக்கும்போது ஆறுதல் மற்றும் பெலனாகவும் இருந்து, எனக்கு வழிகாட்டி, என்னை நடத்துகின்றன! உங்கள் ஊழியத்தை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்! நன்றி, ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” (லிசா)