உன் எண்ணங்கள் குறுகியவையாக இருக்கிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் எண்ணங்கள் குறுகியவையாக இருக்கிறதா?

வேதாகமம் சொல்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6-7)

  • உன் எல்லைகள் ஆண்டவருடைய எல்லைகள் அல்ல.
  • உன் நினைவுகள் அவருடைய நினைவுகள் அல்ல.
  • உன் பயம் அவருக்கு பயமல்ல.

மாம்சீக ரீதியில், கவலைப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் தெய்வீகமான கண்ணோட்டத்தில் பார்த்தால், கவலைப்படுவதற்கான காரணம் எதுவுமே இல்லை! ஏன்?

தாவீது சொல்கிறார்: “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.” (சங்கீதம் 115:3)

இது அற்புதம் இல்லையா? நம்முடைய பிதாவானவர், தம்முடைய குணநலன்களில் நீதியுள்ளவர், நல்லவர் மற்றும் அன்பானவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்; நாம் அவரில் வளர்வதை பிதாவானவர் பார்க்க விரும்புகிறார். நமக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கச் செய்கிறார்.

தாம் விரும்புவதையே ஆண்டவர் செய்கிறார்.

நமது அறிவுத்திறன், நமது சொந்த புரிதல் மற்றும் நம்மைப் பற்றிய அனைத்தும் – குறுகியவை. ஆனால் ஆண்டவரது ஞானத்திற்கு எல்லை வரம்பு என்று எதுவும் இல்லை!

இதை சற்று யோசித்துப் பார்: ஒரு புத்திசாலியான நபர் தனக்குத் தெரிந்தது எவ்வளவு குறைவானது என்பதையும், ஆண்டவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர் என்பதையும் நன்கு அறிவார்.

இந்த வேத வசனத்தின் மூலம் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்: “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, …” என்று எழுதப்பட்டுள்ளது. (எபேசியர் 3:20)

ஆம், நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் மேலாக அவரால் எண்ணற்ற காரியங்களைச் செய்ய முடியும்! இன்று, நீ காணும் கடினமான எந்த வரம்பு எல்லைகளையும் பற்றி கவலைப்படாதே. ஆண்டவர் அவற்றுக்கெல்லாம் மேலானவராய் இருக்கிறார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பழக்கத்திலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்தார். இன்று நான் முனைவர் பட்டம் பெற படித்து வருகிறேன். எனக்கு ஒரு வீடும் காரும் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்காக நான் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆண்டவர் என்னை உடுத்துவிக்கிறார், சரியானதைச் செய்ய தெளிந்த புத்தியைக் கொடுத்திருக்கிறார். மத்தேயு 6:33ம் வசனத்தின்படி, நான் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடினேன், மற்றவைகளை அவர் எனக்கு கூடுதலாகக் கொடுத்தார்.” (பிரகாஷ், சென்னை)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!