சோதனையில்… ஆனால் இயேசுவுடன்! 🔥

முகப்பு ›› அற்புதங்கள் ›› சோதனையில்… ஆனால் இயேசுவுடன்! 🔥

கர்த்தருடன் நெருங்கி ஜீவித்தல் மற்றும் அவரில் வளர்ச்சி அடைதல் என்பது நம் மனதை அவரிடத்தில் அதிகமாக வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. அதன்மூலம் நமது மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அவருடன் பகிர்ந்துகொள்ள முடியும்; அதே நேரத்தில் நமது போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும். நாம் அவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது, ​​அவருடைய வார்த்தையினாலும், அவருடைய அன்பினாலும், அவருடைய ஞானத்தினாலும் மீண்டும் ஊக்கமும் ஆறுதலும் பெறுகிறோம்.

யாக்கோபு 1:2-4 கூறுகிறது, “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.”

நீ எப்படிப்பட்ட சோதனையை இப்போது எதிர்கொள்கிறாய்…

  • மரண இருளின் பள்ளத்தாக்கின் வழியாக சென்றுகொண்டிருக்கிறாயா?
  • விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதா?
  • நீ திறமையற்ற நபராக உணர்கிறாயா?
  • நீ மிகப்பெரிய இழப்பை அல்லது துக்கத்தை எதிர்கொள்கிறாயா?
  • நீ பயப்படுகிறாயா?

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் இருக்கிறது: உன் கண்களை அவர் மீதே நிலைநிறுத்தி அவரையே நோக்கிக்கொண்டிரு! ஒருவேளை நீ இதை ஏற்கனவே அறிந்திருக்கலாம்; ஆனால் இதை மீண்டும் மீண்டும் செய்வது நல்லது; ஏனென்றால் இது உண்மை… இது நம்மை ஆறுதல்படுத்தும் மற்றும் விடுவிக்கும் ஒரு வல்லமை வாய்ந்த உண்மை.

ஆம், ஆண்டவர் உன்னை எங்கு அனுப்ப விரும்புகிறார் என்பது அவருக்குத் தெரியும். உன் பாதையில் வந்த புயல்களின் மத்தியில், அவர் உனது கரத்தைப் பிடித்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவர் தமது திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். அவர் உன் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நீ ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷம்.

சந்தேகப்பட வேண்டாம்… உறுதியாக நில்! உன் கண்களை இயேசுவின் மீது வைத்து, அவரில் உன்னை பலப்படுத்திக்கொள். உன் நம்பிக்கையை விட்டுவிடாதே… உன் சந்தேகத்தை விட்டுவிடு!

இன்று ஆசீர்வதிக்கப்பட்டு உற்சாகமடைவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் ஊக்கமளிக்கும் செய்திகளுக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். பல சமயங்களில், எனது சூழ்நிலைக்கேற்ப ஏற்ற நேரத்தில் உங்களது வார்த்தைகள் என்னோடு பேசுகின்றன. தேவன் மீதான என் விசுவாசத்தை உறுதிப்படுத்த ஆண்டவர் உங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். கடந்த 4 1/2 வருடங்களாக நான் பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன்; ஆண்டவருக்கு அருகில் நெருங்கிச் செல்ல அது எனக்கு உதவியது. இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.” (எப்சிபா)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!