ஆண்டவருடைய ஆற்றலைப் பெற்றுக்கொள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய ஆற்றலைப் பெற்றுக்கொள்!

“கர்த்தருடன் நெருங்கி ஜீவித்தல் மற்றும் அவரில் வளர்ச்சியடைதல்” என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானிக்கும் இத்தருணத்தில், வித்தியாசமான கோணத்தில் இதைத் தியானித்து, நான் ஜெபத்தை ஏறெடுக்க விரும்புகிறேன். ஆண்டவர் உன்னைப் பலப்படுத்தும்படியும், உன்னோடு இணைந்து நடக்கும்படியும், உன்னை வழிநடத்தும்படியும் நீ அவரிடம் கேள்.

ஏனென்றால், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என ஆண்டவருடைய வார்த்தையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (யோவான் 15:5) எனவேதான் ஆண்டவரில் வளர வேண்டுமானால், ஜெபம் மிகவும் முக்கியமானது.

என்னுடன் சேர்ந்து ஜெபம் செய்ய உன்னை அழைக்கிறேன்…

“ஆண்டவரே, நீரே என் வாழ்வின் அனைத்திலும் ஆதாரமும் ஆற்றலுமாய் இருக்கிறீர்; எனக்கு திராட்சைச் செடியாய் இருப்பவரும் நீரே. நீர் இல்லாமல், நான் ஒன்றும் இல்லை; என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது. உமது பரிசுத்த ஆவியானவரின் உதவியால் உம்மில் உறுதியாக இணைந்திருக்க எனக்கு உதவி புரிவீராக.

உமது நினைவுகள் என்னுடையதை விட மிக உயர்ந்தவை; சில சமயங்களில் “உம்மில் நிலைத்திருப்பதன்” அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரிவதில்லை. ஆனால் விசுவாசத்தினால், நான் என் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், என் முழு பலத்தோடும் தொடர்ந்து உம்மைத் தேட விரும்புகிறேன்.

நான் உமக்காக வாழ விரும்புகிறேன். எனது குடும்பம், எனது நண்பர்கள், எனது அயலகத்தார், எனது சக பணியாளர்கள் மற்றும் நான் தொடர்புகொள்ளும் அனைவரிடமும் கனிகொடுக்கிற நல்ல வாழ்க்கையை வாழ நீர் எனக்கு அருள்புரியும்.

சில சமயங்களில், என் சொந்த பலத்திலும், என் சொந்த வழியிலும் காரியங்களைச் செய்ய முயற்சிப்பதால் நான் சோர்வடைகிறேன். இயேசுவே, என்னை உம் அருகில் வைத்துக்கொள்ளும்! நீர் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். நான் சோர்வடைய விரும்பவில்லை… நான் இளைப்பாறும் இடத்தில் வாழ விரும்புகிறேன்; அதுவும் உமது ஜெயத்தில் இளைப்பாற விரும்புகிறேன். உமது மகிமைக்காக என் வாழ்நாள் முழுவதும் நான் ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்க விரும்புகிறேன். இன்று, என் பலத்தை உம்மிடத்திலிருந்து மட்டுமே பெறுவதை நான் தெரிந்துகொள்கிறேன்.

என் கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். ஆமென்!”

இன்றைய ஜெபம், “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்ற வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது (யோவான் 15:5)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், உங்களுக்கும் இந்த ஊழியத்தைச் செய்யும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் வாழ்க்கையில் எல்லாமே தவறாகப் போய்க்கொண்டிருந்தது. பிறகு, இந்த ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் ஊழியத்தை நான் சந்திக்க நேர்ந்தது. இது நிச்சயமாக ஒரு அதிசயமே! இயேசு கிறிஸ்துவே என் அடைக்கலம் என்பதை அறிந்து கொண்டதால், என் விசுவாசம் பெருகினது. நான் பாவியாக இருந்தாலும், அவரில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்; அவரால் நேசிக்கப்படுகிறேன். எனக்காக இருப்பதற்கு நன்றி.” (நான்சி, பாளையங்கோட்டை)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!