ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்

நீ யாரை நம்புகிறாய்? உதாரணமாக, உன் குழந்தையை ஒரு நாள் பார்த்துக்கொள்ள யாராவது உனக்குத் தேவைப்பட்டால், அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதற்கு உன் விதிமுறை என்னவாக இருக்கும்?

நீ ஒருவரை நம்புவதற்கு, அந்த நபர் நேர்மையானவர் என்ற உறுதி உனக்கு வேண்டும். தனக்கு ஒப்புவிக்கப்பட்டதை சரியாகச் செய்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? தனது வாக்கைக் காக்கக்கூடிய நம்பகத்தன்மை உடைய நல்ல நபர் யார்? உன்னைக் கைவிட்டுவிடாமல் இருக்கும் நபர் யார்?

ஆண்டவர் முற்றிலும் உண்மையுள்ளவர்… வேதாகமம் முழுவதிலும் ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியிருப்பதை நாம் காணலாம்! இந்த வல்லமை வாய்ந்த உண்மைகளை நாம் காண்போம்:

ஏசாயா 55:11: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”

எரேமியா 1:12: “அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் (வேகமாக) நிறைவேற்றுவேன் என்றார்.”

யோசுவா 21:45: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”

நீ பார்த்தாயா? தேவன் எதைச் சொன்னாலும், அவருடைய வார்த்தை பொன் போன்றது என்பதையும், அவர் சொன்னதைச் செய்வார் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. நீ அவருடைய வார்த்தையை நம்பி காத்திருக்கலாம். இதுவரை அது நிறைவேறியது; மீண்டும் அது நிறைவேறும்!

நாம் ஒன்றாக சேர்ந்து கர்த்தருக்கு நன்றி கூறுவோம்: “ஆண்டவரே, உமது வார்த்தை உம்மிடத்துக்கு வெறுமையாகத் திரும்பாமல், நீர் விரும்பியதைச் செய்து, நீர் அனுப்பிய காரியமாக வாய்க்கும் என்பதால் உமக்கு நன்றி! நான் உமது வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கிறேன். நீர் உண்மையுள்ளவர் என்பதை நான் நம்புகிறேன். நீர் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவீர்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!