ஆண்டவரது அலைகள் உன்மேல் வீசிக் கடந்து செல்லட்டும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரது அலைகள் உன்மேல் வீசிக் கடந்து செல்லட்டும்

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” (சங்கீதம் 42:5-6)

சில நேரங்களில், உன் வாழ்க்கை ஒரு பாலைவனம் போன்றதாகத் தோன்றுகிறது. இரண்டு மணல் குன்றுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கையில், நிழலைக் காண முடியாதபடி, அது உன்னைத் தகனித்துவிடக்கூடும் என்ற அச்சுறுத்தலை சந்திக்கும் நிலையில் நீ நிற்கலாம்.

ஆனால் நற்செய்தி என்னவென்றால், ஆண்டவர் பாலைவனத்தில் ஒரு நதியை உண்டாக்குகிறார்: “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” (வெளிப்படுத்துதல் 22:1-2)

“யோர்தான் தேசம்”.. யோர்தான் நதி இஸ்ரவேலின் குறுக்கே பாய்கிறது. “யோர்தான்” என்ற வார்த்தையின் அர்த்தம் “இறங்குதல்” அல்லது “கீழே பாய்ந்து வருதல்” என்பதாகும். உன்னை மீண்டும் தம்மிடம் உயரே எழும்பச் செய்யவும், தம்முடைய மகிமையில் உன்னை மறுரூபமாக்கவும், இயேசு ஒரு நதியைப்போல, வானத்திலிருந்து இறங்கி வந்தார்.

“உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.” (சங்கீதம் 42:7)

ஆண்டவரின் நதி உன் மீது, அலை அலையாக, ஆழமாகப் பாய்ந்து, கலக்கத்தை உண்டாக்கும் சகல காரியங்களையும் உன்னைவிட்டு நீக்கி கழுவட்டும். கலக்கத்தை உண்டாக்கும் எந்த அலையையும் விட ஆண்டவரின் அலை மிகவும் வல்லமை வாய்ந்தது.

ஆண்டவரின் மகத்துவத்துடன் ஒப்பிடுகையில், உன்னை ஒடுக்கும் எதுவும் சிறியது என்பதை நினைவில் கொள்வாயாக. நீ இனி சோர்வடையத் தேவையில்லை. கர்த்தர் உன் நடுவில் இங்கே இருக்கிறார்! அவருடைய அன்பின் அலைகள் உன்னைக் கடந்து செல்லட்டும்.

சிறிது நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, என் மீது மோதும் மனச்சோர்வு, கவலை, அநீதி எனும் அலைகள் அனைத்தின் மத்தியிலும் உமக்கு அருகில் திரும்பி வருவதையே நான் தேர்வு செய்கிறேன். குறைகூறுவதை விட்டுவிட்டு உம்மை நோக்கிக் கூப்பிடுவதையே நான் தேர்வு செய்கிறேன். ஊக்கம், குணப்படுத்துதல், மீட்பு மற்றும் மன்னிப்பு போன்ற புதியதும் வல்லமை வாய்ந்ததுமான அலைகளைப் பெற நான் என் பார்வையை உம் மீது திருப்புகிறேன். நான் உமது நாமத்தை ஸ்தோத்தரிக்கிறேன். ஆண்டவரே! நான் ஒருபோதும் விழாதபடி என்னைக் காப்பதற்காக நன்றி கூறுகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெறத் துவங்கியதிலிருந்து, ஆண்டவர் பெரிய மாற்றங்களை என்னுள் செயல்படுத்தி வருகிறார். எனது வேலையை நான் இழந்துவிட்டேன்; 24 வருடங்களாக நான் பணியாற்றிய ஒரு கல்லூரியில் அநியாயமாக என்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அத்தருணத்தில் நாங்கள் குடும்பமாக ஒரு திருச்சபையைக் கண்டுபிடித்தோம்; குடும்பமாக நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம். நானும் என் மனைவியும் ஒன்றாக வேதபாடம் கற்று வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்படி தேவன் கிரியை செய்கிறார். நாங்கள் தள்ளாடமாட்டோம், எங்களது விசுவாசத்தை இழக்கமாட்டோம். சொல்லப்போனால், நாங்கள் முன்பை விட இப்போது ஆண்டவருக்குள் ஸ்திரமாக இருக்கிறோம். ஆண்டவருக்கு நன்றி. ” (டேனி, தூத்துக்குடி)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!