தேவன் மீதான விசுவாசம்! 💪

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் மீதான விசுவாசம்! 💪

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” (சங்கீதம் 42:5-6)

இன்று, உன் வாழ்க்கையை சற்று வேகமாக ஆராய்ந்து பார், நீ எதை விசுவாசிக்கிறாய்? உன் தேவைகளுக்காக நீ யாரை நம்பியிருக்கிறாய்? அல்லது எதை நம்பியிருக்கிறாய்?

  • உன்னையே நீ நம்பியிருக்கிறாயா?
  • உன் மனைவியை நம்பியிருக்கிறாயா?
  • உன் வங்கிக் கணக்கை நம்பியிருக்கிறாயா?
  • உன் முதலாளியை நம்பியிருக்கிறாயா?

நீ எதை நம்பி வாழ்கிறாய் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறேன்: ஒவ்வொரு முறையும் ஆண்டவர் மீது உன் விசுவாசத்தை வைப்பது மிகவும் நல்லது. தம்மை நம்பியிருப்பவர்களுக்கு எவ்வாறு பிரதிபலன் தருவது என்பதையும், பலன் அளிப்பது என்பதையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

வேதாகமம் நமக்குச் சொல்கிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6)

அவரால் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். நிச்சயமாகவே நமது எல்லா தேவைகளையும் அவர் பூர்த்தி செய்வார். அவரது பரலோக பண்டகசாலையில் ஏராளமான வஸ்துகள் உள்ளன. இன்று, எந்தப் பொருளையும்விட அல்லது வேறு எந்த நபரையும்விட அவரை நீ அதிகமாக நம்பலாம். ஆம், அவருடைய ஐசுவரியம்… அளவிட முடியாதவையாக இருப்பதால், அவரை மட்டுமே நீ விசுவாசித்தால் போதுமானது!

“பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்று வேதாகமம் சொல்கிறது. (சங்கீதம் 118:9)

நாம் ஏன் ஆண்டவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும்? ஏனென்றால், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19)

உன் ஆண்டவர் நிச்சயம் பொய் சொல்லமாட்டார், அவர் உன் வாழ்வைக் குறித்து உரைத்த தம்முடைய வார்த்தையையும் தமது வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றாமல் பின்வாங்குவதில்லை. தாம் சொன்னதை நிச்சயமாக செய்து முடிப்பார். அதை நீ உறுதியாக நம்பலாம். சந்தேகப்படாமல், அவர் மீது உன் நம்பிக்கையை வைத்து, அவரையே விசுவாசித்து, அவர் உனக்காக என்ன செய்ய விரும்புகிறாரோ, அதற்கு முழுமையாக இடமளிக்குமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!

ஆண்டவர் உன்னை அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் இப்போது சற்று கடினமான நேரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன். நம்பிக்கையை இழக்கும்போதெல்லாம், தேவன் என்னுடன் கூட இருக்கிறார் என்பதையும் நான் வெற்றி பெறுவேன் என்பதையும், உங்களது தினசரி மின்னஞ்சல்கள் முலமாகவும், என் கனவுகள் முலமாகவும் மற்றும் பிற வழிகளிலும் ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறார்.” (ஷெர்லி, செங்கல்பட்டு)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!