மகிழ்ச்சிக்கான வழி (நல்ல மூலப்பொருட்களால் மட்டுமே அது சாத்தியம்…!) 😄
முகப்பு ›› அற்புதங்கள் ››
சரியான விதத்தில் நடைபெறாத ஒரு காரியத்தை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? உன் வாழ்க்கையில் திட்டமிட்டு நடைபெறாத எல்லா காரியங்களின் நிமித்தம் உன் மனம் சோர்ந்துபோகிறது. அது உன் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பாதிக்கிறது. அப்போது உன் எண்ணங்கள் மன அழுத்தத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன, அது உனக்கு எந்த நன்மையும் தராது; மாறாக, அது உன் மகிழ்ச்சியைத் திருடுகிறது… நான் சில நேரங்களில் என்னை வருத்தப்படுத்தும் காரியங்களை சிந்தித்துப் பார்ப்பேன், அல்லது நான் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் பற்றித் தனிமையில் யோசித்துப் பார்ப்பேன். அந்த நேரங்களில் நான் மிகவும் சோர்வடைவதுண்டு!
ஆனால் இன்று, எனது சொந்த வாழ்க்கையில், என் இதயத்தைக் கவலையிலிருந்து பாதுகாக்கவும், என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கவும் உதவிய ஒரு திறவுகோலை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த திறவுகோல் பற்றி இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது: “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.” (சங்கீதம் 126:3)
ஆண்டவர் எனக்காகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார், எனவே அதன் மீது நான் கவனம் செலுத்தப்போகிறேன். இப்போது நடப்பதில் நான் கவனம் வைக்கிறேன்: நடப்பது, குதிப்பது, உட்காருவது, ஓடுவது போன்ற பல விஷயங்களைச் செய்ய உதவும் என் சரீரத்தையும் என் வாழ்வையும் எண்ணி நன்றி சொல்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மை செய்யத்தக்க கிருபை எனக்கு இருக்கிறது. அது என் இதயத்தை நல்ல விஷயங்களால் நிரப்புகிறது…!
ஆண்டவருடன் இணைவதற்கும், அவரிடமிருந்து எனக்குத் தேவையான அனைத்து அன்பையும் பெலத்தையும் பெறுவதற்கும் எனக்கு உதவும் மனம், எனக்கு இருக்கிறது.
என் தலைக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறது. எனக்கு நண்பர்கள் உள்ளனர், என்னை ஊக்குவிக்க ஆண்டவரின் வார்த்தை உள்ளது. நான் மகிழ்ச்சியடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன, என்னைப்போலவே உனக்கும் மகிழ்ச்சியடைவதற்கான பல காரணங்கள் உண்டு என்று நான் நம்புகிறேன்!
நடக்காத விஷயங்களைப் பற்றி சிந்திப்பதை விட நன்றாக நடக்கும் விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்குவது நம்மை எப்போதும் ஊக்குவிக்கும், நம் ஆத்துமாவை உயர்த்தும், இன்னும் ஒரு சிறந்த நாளைக் காண உதவும்!
நீ என்ன நினைக்கிறாய்? உன் வாழ்க்கையில் எது சரியாக நடக்கிறது? இந்தப் பக்கத்தில் உன் கருத்தைப் பகிருமாறு உன்னை அழைக்கிறேன்!
ஆண்டவர் உனக்காக அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார். மகிழ்ச்சியைத் தேர்ந்தெடு!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் தினசரி பகிர்வுக்கு நன்றி; நான் தினமும் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உங்களது வேத வசன செய்திகள் என்னை ஊக்குவிக்கின்றன. ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பது எனக்குத் தெரியும்; அவர் எப்போதும் என் பக்கத்தில் இருக்கிறார். அவர் தொடர்ந்து எனக்குக் கொடுக்கும் பெலனுக்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். மேலும் நான் உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருக்கவும், ஏற்ற நேரத்தில் சகலமும் நேர்த்தியாக நடைபெறும் என்ற என் நம்பிக்கை பெருகவும் ஆண்டவர் எனக்கு உதவும்படி நான் அவரிடத்தில் ஜெபிக்கிறேன்.” (இவாஞ்சலின்)