உனக்கு முன்பாக உள்ள சாலை கற்பாறையாக உள்ளதா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒரு கிறிஸ்தவராக, பெரும்பாலும் நம் வாழ்க்கையானது நமது இறுதி இலக்கை அடையும்வரை, அது நாம் பயணிக்கும் ஒரு சாலையுடன் ஒப்பிடப்படுகிறது: பரலோகத்துடன் ஒப்பிடப்படுகிறது! நாம் பயணிக்கும் இந்தப் பாதையானது சில சமயங்களில் இனிமையானதாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில், நம் வாழ்வில் வானம் மந்தாரமாகவும், அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் காணப்பட்டு, சாலை மிகவும் ஆபத்தானதாகக் காட்சியளிக்கிறது.
இன்று ஆண்டவர் உனக்கு அளிக்கும் வாக்குத்தத்தம் இதோ: “வழுவாதபடி உங்களைக் காக்கவும்… வல்லமையுள்ளவரும்” (யூதா 1:24)
ஆம், கற்பாறையாகவும் ஆபத்தாகவும் இருக்கும் சாலையில் நீ தடுமாறி விழுவதைத் தடுப்பவர் இயேசு ஒருவரே ஆவார். நீ இப்படிப்பட்ட காலகட்டத்தில் இருப்பதைப்போல் உணர்கிறாயா? காரியங்கள் உன்னை நெருக்குவதைப்போலவும், துன்பங்கள் உன்னைத் தடுமாறச் செய்வதைப்போலவும், அல்லது பாரமான சுமைகள் உன்னை எழும்பவிடாமல் அமிழ்த்துவதைப்போலவும் நீ உணர்கிறாயா?
உன் இரட்சகராகிய இயேசு, நீ தடுமாறாமல் நடக்கும்படி உன்னைக் காத்து, உன்னோடு சேர்ந்து நடக்கிறார் என்பதை அறிந்துகொள்! அவர் நீதியின் சூரியன், அவர் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்தும் ஒளியாக இருக்கிறார், சீக்கிரத்தில் சூரியன் மீண்டும் பிரகாசிப்பதையும், உன் பாதையில் வெளிச்சத்தையும் நீ காண்பாய்… தைரியமாகக் காத்திரு!
என்னுடன் சேர்ந்து இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறாயா? “ஆண்டவரே, நீர் செய்யும் எல்லாவற்றிற்காகவும் நான் எப்படி நன்றி கூறுவது? அவற்றை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளில்லை, என் இருதயமோ உம் மீதான அன்பினால் நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நான் தடுமாறாமல் என்னைக் காத்து வழிநடத்தியதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மைப்போலவே செயல்பட, எனக்கு போதித்து, என்னை வழிநடத்தி மற்றும் எனக்கு உதவி செய்வீராக. உமது ஆவிக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என் இரட்சகரே, என் இயேசுவே, உமது நாமத்தை ஸ்தோத்தரிக்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் வாயிலாக வரும், வாசகர்களின் தினசரி சாட்சிகளை வாசிப்பதன் மூலமும், தினசரி ஜெபங்களை ஏறெடுப்பதன் மூலமும் ஆண்டவருடன் எவ்வாறு உறவாடுவது என்பதை நான் கற்றுக்கொண்டேன். நாம் மனந்திரும்பி பாவமன்னிப்பு கேட்கும் எல்லா காரியங்களையும் ஆண்டவர் நமக்கு மன்னிக்கிறார் என்பதையும், அவர் நம் ஜெபங்கள் அனைத்திற்கும் செவி கொடுக்கிறார் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய பல ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தது, நான் தனியாக இல்லை என்று நம்புவதற்குப் போதுமான விசுவாசம் இப்போது எனக்கு இருக்கிறது.” (மெர்லின், திருச்சி)