புத்துணர்வு பெறும் நேரம் வருகிறது!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 23:2ஐ பார்க்கவும்)
இந்த அமர்ந்த தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது.
திரித்துவத்தில் ஒருவரான இந்த பரிசுத்த ஆவியானவர் உனக்கு அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றைத் தருகிறார். (வேதாகமத்தில் கலாத்தியர் 5:22-23ஐ பார்க்கவும்)
உலகம் படைக்கப்பட்டபோது, தேவனுடைய ஆவியானவர் தண்ணீர்களின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.
“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” (பரிசுத்த வேதாகமம், ஆதியாகமம் 1:2)
பரிசுத்த ஆவியானவருக்கும் தண்ணீருக்கும் இடையே உள்ள இந்த தொடர்பை இயேசுவும் தெளிவாக விளக்கி உள்ளார்:
“பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.” (வேதாகமத்தில் யோவான் 7:37-39ஐ பார்க்கவும்)
உன் மேய்ப்பரான இயேசு, உன்னை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கூட்டிச் செல்ல விரும்புகிறார். உன் ஜீவனிலிருந்து கர்த்தருக்கு துதிகள் எழும்பத்தக்கதாக, பரிசுத்த ஆவியானவரால் உன்னை நிரப்ப விரும்புகிறார். உன்னிலிருந்து ஜீவ நதி பாய்ந்தோடி, உன்னிலிருந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதம் நிரம்பி வழியத்தக்கதாக நீ ஒரு புதிதான புத்துணர்ச்சியடைந்த நபராக இருப்பதை தேவன் காண விரும்புகிறார்!
“ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்….” (பரிசுத்த வேதாகமம், அப்போஸ்தலர் 3:19-20)
இன்று உனக்காக இந்த வசனத்தை சொல்லி நான் ஜெபிக்கிறேன்!