நீ எப்போதாவது உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டிருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எப்போதாவது உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டிருக்கிறாயா?

தாவீது மற்றும் கோலியாத்தின் கதை உனக்குத் தெரியுமா? (1 சாமுவேல் 17ல் நீ அதை மீண்டும் வாசிக்கலாம்).

இந்தக் கதையில் நீ உன்னையே பார்த்திருக்கலாம்… இளைஞனான தாவீது கோலியாத்துடன் சண்டையிட வேண்டும். தாவீது தயாராகிக்கொண்டிருக்கும்போது, சவுல் ராஜா தனது சொந்த கவசத்தை அணியுமாறு அறிவுறுத்துகிறார்.

வேதாகமத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது, “சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.” (1 சாமுவேல் 17:38)

தாவீது இதுவரை கவசங்களை அணிந்திருக்கவில்லை என்றாலும், சவுலின் கவசத்தை அணிய ஆசைப்பட்டார்.

இருப்பினும், அடுத்து என்ன நடந்தது என்று பார்ப்போம்: “அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டான்” (1 சாமுவேல் 17:39)

இந்தக் கடைசி வாக்கியத்திற்கு உன் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். உன் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஐந்து எளிய வார்த்தைகள்: “எனவே தாவீது அவைகளைக் களைந்து போட்டான்.”

தாவீது கவசத்தைக் களைந்துபோட்டான்… மற்றவர்களின் எதிர்பார்ப்பை தாவீது கண்டுகொள்ளாதிருந்தான்… தாவீது ஒப்பிட்டுப் பார்த்தலைத் தவிர்த்தான்… அதுவே அவனது வெற்றிக்கு முக்கிய காரணம்! தாவீது தனக்கு முன் இருந்த இராட்சதனை வெல்வதற்கு சவுலைப் போல போராட வேண்டிய அவசியமில்லை. அவனுக்குத் தேவையானது அவன் அவனாக இருப்பதுதான்.

போரில் வெல்வதற்கு அவனது கவண் (உண்டிகோள்) மற்றும் ஆண்டவர் மீது நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு மட்டுமே அவனுக்குத் தேவைப்பட்டது. இது நடைமுறைக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் வெற்றியைத் திரும்பக் கொண்டுவருவதற்கான தனித்துவமான திறமைகளை ஆண்டவர் ஏற்கனவே தாவீதிற்குக் கொடுத்திருந்தார். இது உனக்கும் பொருந்தும்.

பல ஆண்டுகளாக, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்பதை ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார். ஆண்டவர் என்னை வேறொருவரைப் போலப் படைக்கவில்லை, அதனால் நான் நானாக இருப்பதைத்தவிர வேறொன்றாக இருக்க ஏன் முயற்சிக்க வேண்டும்? உன் வாழ்க்கையில் உன்னை வேறுபடுத்தும் விஷயங்கள் தடைகள் அல்ல… அதுவே உன்னுடைய தனித்துவமிக்க சொத்துக்கள்.

உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடும் சலனத்தை எதிர்த்து நில். ஆண்டவர் உன்னை மனப்பூர்வமாக நேசிக்கிறார் மற்றும் உன்னை ஒரு தனித்துவமான வழியில் பயன்படுத்துவார்.

ஆண்டவர் இன்று உன்னை அவருடைய அன்புடனும் பாதுகாப்புடனும் சூழ்ந்திருக்கட்டும்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!