உன் சூழ்நிலை சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் ஆண்டவர் எப்போதும் சரியானவர்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் திருடுவதற்கு ஒத்துழைப்பதுபோல, நம் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாகத் தோன்றும் தருணங்கள் உண்டு. ஆனால் ஆச்சரியமாகத் தோன்றினாலும், நீ ஒரு சுவருக்கு எதிராக நிற்கும்போதுதான், ஒரு கயிற்றை அதன்மீது எறிந்து, மேலே ஏறி, அதைத் தாண்ட முடியும். ஒரு மலையின் அடிவாரத்தில் இருக்கும்போதுதான், நீ அந்த மலைக்கு மேலே ஏறிச்செல்வதற்கு சரியான இடத்தில் இருக்கிறாய்!
“தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.” (சங்கீதம் 108:13)
- ஆண்டவரின் உதவியோடு நீ பெரிய காரியங்களைச் செய்வாய்!
- ஒரு சிக்கலான, குழப்பமான அல்லது புரியாத சூழ்நிலையின் நடுவில் அவர் தமது பெலனையும், சமாதானத்தையும், தைரியத்தையும் தருகிறார்.
- அவர் சர்வவல்லமையுள்ளவர், ஆகையால் முட்டுச்சந்தாக தோன்றும் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற ஒரு வழியை உருவாக்குவார்.
- உன் எதிரிகளை நசுக்கி, அவர்களை விரட்டியடிப்பவரும் அவரே.
உன் நிலைமை சரியாக இல்லாவிட்டாலும், உன்னைப் பாதுகாக்கிறவர் மிகச்சரியானவராய் இருக்கிறார். பெலத்திலும் நம்பிக்கையிலும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டிய நேரம் இது. அவருடைய கண்களின் வழியாக விஷயங்களைப் பார்க்கவும், அவருடைய வல்லமையை அனுபவிக்கவும், அவருடைய அற்புதத்தைப் பெறவும் ஆண்டவரின் கிருபையைப் பெற்றுக்கொள்!
“ஆண்டவரே, என் நிலைமை பரிபூரணமாக இல்லாவிட்டாலும், நீர் பரிபூரணமானவராய் இருக்கிறீர்! நான் எதிர்கொண்டிருக்கும் என் மலையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கு நன்றி…மேலும் அதின்மீது ஏறி கடந்து செல்ல எனக்கு இது ஒரு வாய்ப்பு! உம்முடைய உதவியால் நான் பெரிய காரியங்களைச் செய்வேன்! நீர் என் சர்வவல்லமையுள்ள தேவன், உம் வழியாக நான் ஒரு வெற்றியாளர். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”